வாடகைத்தாய் பண்ணைகள்..அதிகாரிகள் அதிரடி ஆய்வு..வணிகமயமாகும் தாய்மை..மருத்துவர்கள் கூறும் தீர்வு
சென்னை: சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வாடகை தாய்மார்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இடத்தில் மூன்று பேர் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கர்ப்பிணி தாய்மார்கள் யாரும் சட்டவிரோதமான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வாடகைத்தாய் என்ற சொல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரபரப்பாக ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. அதற்குக் காரணம் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியில் குழந்தை பெற்றுக்கொண்டதுதான்.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம்தேதி நடந்தது. இந்நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9ஆம்தேதி ட்விட்டரில் தெரிவித்தார். திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்ததால், அவர்கள் வாடகைத் தாய்மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. வாடகைத்தாய் வணிகமயமாகிறதா என்றும் கேள்வி எழுப்பினர்.

நயன்தாராவிடம் விசாரணை
வாடகைத் தாய் விஷயத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் முறையாக விதிகளை பின்பற்றினரா அல்லது விதிமீறல் நடந்துள்ளதா என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டில் திருமணம்
இதனிடையே நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டில் பதிவு திருமணம் செய்ததாகவும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற கடந்த 2021 டிசம்பரில் பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பான ஆவணங்களை சுகாதாரத் துறை குழுவினரிடம் அவர்கள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க சுகாதாரத் துறை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

வாடகைத்தாய் பண்ணைகள்
இந்த நிலையில் தமிழகத்தில் தடையை மீறி சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஆங்காங்கே வாடகைத் தாய் மூலம் பலர் குழந்தை பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் சூளைமேடு, அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், பெண்களை வாடகைத் தாயாக்கி, வணிக ரீதியில் குழந்தை பெற்றுக் கொடுக்கும் பண்ணைகள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

தனியார் கருத்தரிப்பு மையத்தில் சோதனை
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மருத்துவமனையில் வாடகை தாய்மார்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. வடமாநிலங்களில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டு சட்ட விரோதமாக வாடகைத்தாயாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. வறுமையில் வாடும் இளம் பெண்களை குறிவைத்து வாடகைத்தாய்களாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதிகாரிகள் ஆய்வு
இது குறித்து விசாரிக்க மூன்று அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சூளைமேட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவமனையில் ஆய்வு செய்வதற்காக 3 அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டில் ஆய்வு செய்தபொழுது அங்கு தங்கி இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையின் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் என அங்கு இருந்தவர்கள் ஒப்புக் கொண்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகத்தின் தரப்பிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை இதுகுறித்து விரிவான அறிக்கையை மூன்று அதிகாரிகளும் சுகாதாரத்துறைக்கு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடகைத் தாய் ஒழுங்குமுறை சட்டம்
இந்தியாவில் 'வாடகைத் தாய் ஒழுங்குமுறை' சட்டம் கடந்த 2021-ல் அமலுக்கு வந்தது. திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதியோ அல்லது இருவரில் ஒருவரோ குழந்தை பெற முடியாதவராக இருக்க வேண்டும். முதலில், மாவட்ட மருத்துவ வாரியம் பரிசோதனை செய்து, இந்த தம்பதியால் குழந்தை பெற முடியாது என்று சான்று தரவேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் வாடகைத் தாயை நாட முடியும். வாடகைத் தாயாக வருபவர் பிரதிபலன் எதிர்பார்க்காத நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.வாடகைத் தாயாக இருக்கும் காலத்தில் அவருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் தரலாமே தவிர, வாடகைத் தாயாக இருப்பதற்கு பணம் கொடுக்க கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications