தி.நகரில் ஷாப்பிங் செய்தாரே சுஷ்மா.. மறக்க முடியுமா.. பாஜக பெண் நிர்வாகி வேதனை
சென்னை: மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை வந்த போது தி நகரில் உள்ள பொருள்களை விரும்பி வாங்கி மகிழ்ந்தார் என பாஜக பெண் நிர்வாகி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன் தினம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றவர். தனக்கு கொடுத்த இலாகாவில் பணிகளை செவ்வனே செய்து முடித்தவர். உதவி என யார் கேட்டாலும் அவர்களுக்கு சளைக்காமல் உதவக் கூடியவர்.

நன்கு பழகுபவர்
இவரது இழப்பு பாஜகவினருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இழப்பாகும். கட்சி பேதமின்றி அனைவருடனும் நன்கு பழகக் கூடியவர்.

சில பொருட்கள்
சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்தார். அப்போது தமிழக பாஜகவின் துணை தலைவராக இருந்த லலிதா சுபாஷிடம் அன்பாக பழகினார். அவருடன் சேர்ந்து சில பொருட்களை வாங்க திநகர் சென்றார்.

எளிமை
இதுகுறித்து லலிதா கூறுகையில் சுஷ்மாவின் எளிமையும் பழகும் பண்பும் என்றும் மறக்க முடியாதவை. அவர் சென்னை வந்த போது திநகர் பாண்டி பஜாரில் பொருட்களை வாங்க விரும்பினார். அங்கே வெளியே விற்ற உணவு முதல் துணிகள் வரை அத்தனையையும் வாங்கினார்.

சுத்தமான உடை
பின்னர் சென்னை கடற்கரைக்கு சென்றோம். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் சென்றோம். மல்லிகைப்பூ வைத்துக் கொள்வதை சுஷ்மா மிகவும் விரும்புவார். எப்போதும் சுத்தமான உடை அணிவதில் கவனம் செலுத்துவார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications