அரசு பஸ் ஊழியர்களுக்கு போன ஷாக் நியூஸ்.. கடன் உதவி நிறுத்தம்.. கூட்டுறவு கடன் சங்கம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சங்க கழகத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடன் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை, போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

tamil nadu transport corporation

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சங்க கழகத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கடன் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்க செயலாளர் உமாசந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து கழகங்கள் உறுப்பினர்களின் கடனுக்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்த மாத தவணை தொகையை சங்கத்துக்கு செலுத்தவில்லை. ரூ.22 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலம் கடன் வழங்குவது மற்றும் சங்க கணக்கை முடித்தவர்களுக்கு தொகை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.

மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிடித்தம் செய்த தொகையை போக்குவரத்து கழகங்களிடமிருந்து வசூலிக்க உரிய நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே, நேற்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை உறுப்பினர்களிடம் இருந்து கடன் மனுக்கள் பெறப்படும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு பிடித்தம் செய்த தொகை மட்டும் கடனாக வழங்கப்படும். நிதிநிலைமை காரணமாக கடன் உயர்வு வழங்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+