மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்கும் அரசுத் திட்டங்களில் தகுதியற்ற ஆண்கள் புகுந்து முறைகேடாகப் பணம் பெற்ற அதிர்ச்சித் தகவல் மேற்கு வங்கத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்த ஊழலை, தற்போதைய பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆளுங்கட்சி நிர்வாகியே தங்களின் முறைகேட்டைத் நேரடியாக ஒப்புக்கொண்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விவரத்தை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
மேற்கு வங்கத்தில் முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய 'லஷ்மிர் பந்தர்' திட்ட உதவித்தொகையை ஆண்கள் பலர் முறைகேடாகப் பெற்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை
இந்த ஊழல் குற்றச்சாட்டை அக்கட்சியின் நிர்வாகியே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். மம்தா பானர்ஜியின் முந்தைய ஆட்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களில் மும்முரமாக முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார்.
மம்தா பானர்ஜி அரசு
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் சுவேந்து அதிகாரி சொல்லும்போது, "முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில், லஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவு பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாயும், பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்களுக்கு 1,700 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. எங்கள் புதிய பா.ஜ.க. ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் தொகை 3,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
ஆனால் முந்தைய ஆட்சியில் இந்த லஷ்மிர் பந்தர் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இப்போது நடத்தப்பட்ட ஆய்வில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தவர்களில் சுமார் 30 லட்சம் பயனாளிகள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக சுருட்டிய ஆண்கள்
குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாக திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியும், முர்ஷிதாபாதைச் சேர்ந்த ராதர்காட் கிராம பஞ்சாயத்து உறுப்பினருமான ரகிபுல் ஷேக் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் இந்த திட்டத்தின் வாயிலாகத் தொடர்ந்து உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.
இதேபோல், மேற்கு மிட்னாபூரை சேர்ந்த மற்றொரு திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகியான உத்தம் குமார் சாவும் இந்தத் திட்டத்தின் கீழ் முறைகேடாகப் பெண்களுக்கான உதவித்தொகையைத் தன் கணக்கில் பெற்று வந்துள்ளார்" என்று முதல்வர் சுவேந்து அதிகாரி ஓபனாகவே குற்றஞ்சாட்டினார்.
சுவேந்து அதிகாரி
இதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாகத் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ரகிபுல் ஷேக்கிடம் போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் இந்த ஊழலை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சொல்லும்போது, "ஆண்களாகிய எங்களின் வங்கி கணக்கிலும் லஷ்மிர் பந்தர் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணம் வந்தது உண்மைதான். இது குறித்து நான் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) நேரில் சென்று புகார் தெரிவித்தேன். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபற்றி நான் வெளியில் பேச முயன்றபோது, பணம் வந்தால் வரட்டுமே, அதை ஏன் வேண்டாம் என சொல்கிறீர்கள்?' என்று எங்கள் கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்களே என்னிடம் சொன்னார்கள்..
முந்தைய ஆட்சி ஊழல் நிறைந்த அரசாகத்தான் இருந்தது. அதனால் அதன் பலன்களை நாங்களும் பெற்றுக்கொண்டோம். இந்த விவகாரத்தை அரசு முறையாக விசாரித்தால், முந்தைய ஆட்சியில் நடந்த இன்னும் பல ஊழல்கள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரும்." என்று ரகிபுல் ஷேக் வாக்குமூலம் தந்துள்ளார்..
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்தத் திட்டத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கான உதவித்தொகையை ஆண்கள் அபகரித்ததும், அதை ஆளுங்கட்சி நிர்வாகியே நேரடியாக ஒப்புக்கொண்டதும் மேற்கு வங்கத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது...!!!
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications