அந்த பொண்ணு எதுக்கு புதருக்குள்ள போச்சு! புதருக்கு லைட்டா போட முடியும்? வார்த்தையை விட்ட எஸ்வி சேகர்
சென்னை: விளாத்திகுளத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் பெண் எதற்கு புதர் பகுதிக்கு சென்றார் என சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகர் திமுக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்துகுளம் அருகே உள்ள வேடாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த மாதம் 10ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானார். மாணவி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.
அடுத்த நாள் காலை, கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மாணவி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

விளாத்திகுளம் மாணவி
இதையடுத்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அருகிலுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (39) என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை
கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு கருது இரவோடு இரவாக அவனை மதுரை மத்திய சிறைக்கு போலீசார் மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அந்தப் பெண் எதற்கு புதர் பகுதிக்கு சென்றார் என சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகர் திமுக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்.
எஸ்வி சேகர் சர்ச்சை பேச்சு
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வருகிறது. பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும். அதேபோல் சில காவல்துறை அதிகாரிகள் மிருகங்களைப் போல நடந்து கொள்கிறார்கள். அவர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
பாலியல் குற்றங்கள்
நாட்டிலேயே அதிகமான பாலியல் குற்றங்கள் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தான் நடைபெறுகிறது. இதை நான் கூறவில்லை பாஜக ஆதரவாளர் தான் கூறியுள்ளார். நமது வீட்டில் வளரும் பெண் குழந்தைகளுக்கு நாம் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அனைத்திற்கும் காவல்துறை கொடுக்க இயலாது. விளாத்திகுளம் மாணவி புதருக்கு பின்னால் இருந்தார் என சொல்கிறார்கள்.
கடும் கண்டனம்
அவர் ஏன் புதருக்கு செல்ல வேண்டும். போலீஸ் ரோட்டில் தான் லைட்போட்டுக் கொடுக்க முடியும். புதருக்குள்ளா போட முடியும்" தமிழகம் சிறந்து விளங்க திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். ராமருக்கு அணில் உதவியது போல் திமுகவிற்கு நான் பிரச்சாரம் செய்வேன்என்றார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications