சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழுசா திருப்பதி ஏழுமலையானாக மாறிய நித்யானந்தாவை பாருங்க... ஏன் இப்படி? என்ன காரணம்

சுவாமி நித்தியானந்தா திருப்பதி ஏழுமலையானைப் போல தங்க நகைகளை அணிந்து காட்சி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: எனக்கென்று ஒரு நாடு என் மக்கள் என்று கூறி கைலாசா நாட்டை வாங்கி அதில் தனி ஆவர்த்தனம் செய்து வரும் நித்யானந்தா இப்போது தினம் ஒரு வேஷங்களை போட்டு வருகிறார். தங்கம் வைரம் ஜொலி ஜொலிக்க முற்றிலும் திருப்பதி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு சமூக வலைத்தளங்களில் காட்சி அளிக்கிறார் நித்தியானந்தா.

பலாத்கார வழக்கில் அகமதபாத் காவல்துறையினரால் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா,திடீரென்று மாயமானார். யுடூயூப் சேனலில் தோன்றிய நித்யானந்தா, ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும் கூறினார்.

தனது தேசத்திற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். யுட்யூப் சேனலில் தினம் தினம் வீடியோ போட்டு எல்லோரையும் அலற வைத்தார். பலரும் கைலாசாவில் கடை ஆரம்பிக்க நித்யானந்தாவிற்கு கடிதம் எழுத ஆரம்பித்தனர்.

காசி விஸ்வநாதர் கோயில், கியான்வாபி மசூதி வளாகங்களில் அகழ்வாராய்ச்சி - வாரணாசி நீதிமன்றம் உத்தரவுகாசி விஸ்வநாதர் கோயில், கியான்வாபி மசூதி வளாகங்களில் அகழ்வாராய்ச்சி - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

 கைலாசா நாணயங்கள்

கைலாசா நாணயங்கள்

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான தங்க நாணயங்களை வெளியிட்டார். பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்து உள்ளார் நித்யானந்தா.

 கைலாசா நாணயங்கள்

கைலாசா நாணயங்கள்

மன்னர்கள் காலத்தில்தான் பொற்காசு புழக்கத்தில் இருந்தது. இப்போது அதே போல பொற்காசுகளை புழக்கத்தில் விட்டுள்ளார் நித்யானந்தா. தனது நாட்டிற்கு என்று புதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா தினம் தினம் ஒரு அவதாரங்களை எடுத்து வருகிறார்.

நித்யானந்தா

நித்யானந்தா

சிவனாக, கால பைரவராக காட்சி அளிக்கும் நித்யானந்தா தற்போது திருப்பதி பாலாஜி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவருங்கள், செல்வம் ஏராளமாக பெருகும் என்றும் பதிவிட்டுள்ளார் நித்யானந்தா.

 முழுசா ஏழுமலையானாக மாறிய நித்யானந்தா

முழுசா ஏழுமலையானாக மாறிய நித்யானந்தா

இந்த அவதாரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளார். தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி வந்த நித்யானந்தா தற்போது நானே கடவுள் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார். இன்னும் என்னென்ன அவதாரம் எடுக்கப்போகிறாரோ?

English summary
Bhava Samadhi Darshan with Nithyananda on April 8, 2021. Nithyananda, who has been buying Kailash Nadu and claiming that a country is my people for me, is now putting on a costume every day. Nithiyananda has transformed the entire Tirupati Lord Balaji to shine with gold and diamonds on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X