Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்வர்ண பாண்ட் திட்டத்தில் புதிய நன்மைகள்? ரூ.1 லட்சம் வரிவிலக்கு கிடைக்குமா: பட்ஜெட் 2026 கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் மீது, நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக, மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வரிச் சுமையை குறைக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று பெரிதும் நம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும் சில அறிவிப்புகளையும் மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.. அது என்ன?

உலகளாவிய பொருளாதார சூழல் நிலையற்று உள்ள சூழலில், உள்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், பணப்புழக்கத்தைதான் அளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.

Gold Bond Savings Scheme Union Budget 2026 Tax Exemption income tax 2026

மத்திய பட்ஜெட் 2026

இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமான எதிர்பார்ப்பு Standard Deduction எனப்படும் "நிலையான வரி விலக்கு"தான்.. கடந்த பட்ஜெட்டில் இது 50000 ரூபாயிலிருந்து 75000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருந்தாலும் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு இது ஈடுகொடுக்கவில்லை என்றே கருதப்படுகிறது..

அதனால்தான் இந்த பட்ஜெட்டில் இந்த விலக்கு வரம்பை ஒரு லட்சம் ரூபாய் அல்லது 1.20 லட்சம் ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது..

ஒருவேளை அப்படி உயர்த்தப்படும் பட்சத்தில், வரி செலுத்துவோர் ஆண்டுக்கு சுமார் 2,500 முதல் 5,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்களும் கணித்து கூறியிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த புதிய வரி முறையை மக்களிடையே அதிக அளவில் பிரபலப்படுத்தவும், நடுத்தர மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் அரசு திட்டமிடுவதாக தெரிகிறது.. .

புதிய வருமான வரி சட்டம்

அதேபோல புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளது.

காரணம், கடந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது, மக்களுக்கு பெரிய நிம்மதியை தந்திருந்தது.. இந்த 2026-ல் புதிய வரி நடைமுறை அமலுக்கு வரும்போது, விதிமுறைகள் எளிமையாகவும், வரித் தாக்கல் செய்யும் முறை வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் ஆசையாக உள்ளது..

வரி செலுத்துவோருக்கு வரும் தேவையற்ற நோட்டீஸ்களைக் குறைத்தல், மூத்த குடிமக்களுக்கான கூடுதல் வரிச் சலுகைகள், பென்ஷன் திட்டங்களில் மாற்றங்கள் போன்ற அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே கணிக்கப்படுகிறது..

நடுத்தர வர்க்கம் - சலுகைகள்

அதேபோல பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பாதுகாப்புத் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு, கிராமப்புறத் திட்டங்கள் மற்றும் சமூக சேவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகத் துறையில் உள்ள சுமைகளை குறைக்க வரிப் பிடித்தம் (TDS) முறையை சீரமைத்தல் மற்றும் சுங்க வரி மாற்றங்கள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், பொதுமக்களைக் கவரும் வகையிலான சில சலுகைகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று பரவலாக பேசப்படுகிறது.

ரயில்வே, வர்த்தகம்

ரயில்வே துறையைப் பொறுத்தவரை, மூத்த குடிமக்களுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த பயணக் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பெண்களுக்கும் கணிசமான கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதால், இதற்கான அறிவிப்பையும் நிதி அமைச்சர் வெளியிடுவாரா என்ற ஆர்வம் பெருகி வருகிறது..

வந்தே பாரத் போன்ற நவீன ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதுடன், பயணிகளின் வசதிகளை மேம்படுத்த நிதி அமைச்சர் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், 2026 பட்ஜெட் வரி சுமையை குறைக்கும் வகையிலும், சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்பதே கோடிக்கணக்கான இந்தியர்களின் பெரும் கனவாக உள்ளது..

தங்க பத்திரம் திட்டம்

அதேபோல எப்படியாவது தங்க பத்திரம் திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.. தங்க பத்திரம் திட்டம் மீண்டும் வந்தால், சிறு முதலீட்டாளர்களுக்கும் தங்கத்தில் சேமிப்பு செய்ய ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

சந்தை நிலவரம், தங்க விலை, அரசின் நிதி நிலை போன்றவைகளை பார்த்த பிறகே முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இருந்தாலும் நடுத்தர மக்களின் சேமிப்புக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+