ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. "கூடிய சீக்கிரம் கிடைக்குமாம்".. பெருகும் எதிர்பார்ப்புகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை, அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை, அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் இன்று சென்னையில் பேசும்போது, இந்த தகவலை அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில், கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வஉ சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய ரேஷன் கடையினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று தொடங்கி வைத்தார்.

காலை 9 மணிக்கு குத்துவிளக்கேற்றி இந்த ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.. இந்நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களின் சந்திப்பின்போது அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசியதாவது:

 பெரிய கருப்பன்

பெரிய கருப்பன்

"தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகள் அளித்து வருகின்றது. குறிப்பாக, அரசின் சார்பில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும், தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 நியாயவிலைக்கடைகள் சொந்த கட்டிடங்களிலும், 24,179 நியாயவிலைக்கடைகள் வாடகை இன்றி பொது கட்டடங்களிலும், 7,952 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

 ஹோப் அமைச்சர்

ஹோப் அமைச்சர்

இதில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான நியாயவிலைக்கடை 12,000 ரூபாய் வீதம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்துள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியாலும், பொதுமக்களின் ஒத்துழைப்போடும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வாடகை அடிப்படையில் புதிய நியாயவிலைக் கடை இன்று தொடங்கப்பட்டது... மேலும், நியாயவிலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கும், பொதுமக்கள் காத்திருக்காமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 ஹேப்பி தகவல்

ஹேப்பி தகவல்

மேலும், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம் தேவையான அனைத்து பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6500 காலிபணியிடங்கள் நிரப்புவதற்கு நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு இப்போது மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளார் அமைச்சர். அமைச்சரின் இந்த அறிவிப்புதான் மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.

 பாயிண்ட் ஆஃப் சேல்

பாயிண்ட் ஆஃப் சேல்

இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் இடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+