Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட போயி.. மோடி கையை கெட்டியாக பிடித்து கொண்ட ஸ்டாலின்.. ஸ்நேக புன்னகை + இழையோடிய நெருக்கம்.. அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் வணக்கம் சொல்லி வரவேற்றார்.. அப்போது, இன்முகத்துடன், பிரதமரின் கையை, முதல்வர் ஸ்டாலின் இறுக்கமாக பற்றிக்கொள்ள, அவரது வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, மத்திய பாஜகவை அதிகம் விமர்சித்து வந்தது திமுக.. குறிப்பாக, ஒவ்வொரு முறையும், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் திரண்டு சென்று, தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது.

 Sweet incident and tamil nadu chief minister welcoms pm modi in chennai airport

கோ பேக் மோடி என்ற வாசகமும் அந்த சமயத்தில் இணையத்தில் ட்ரெண்டானது.. கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன் பறக்க விடுவது என எதிர்நடவடிக்கைகளில் இறங்கி, மத்திய அரசு மீதான தங்கள் கோபத்தை அதிர வெளிப்படுத்தி வந்தது திமுக.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் திமுக அரியணை ஏறியுள்ள நிலையில், இந்த நிலைப்பாட்டில் மாறுபாடை கடைப்பிடித்தது.. மோடிக்கு கருப்பு குடை காட்டப்படவில்லை.. "இரட்டை வேஷம்" என்று திமுகவை எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன..

 Sweet incident and tamil nadu chief minister welcoms pm modi in chennai airport

கெஸ்ட்: இதையடுத்து, கடந்த வருடம், திமுக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டிருந்த அறிவிப்பில், "பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல.. நண்பர்தான். இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு "கெஸ்ட்".. அதனால், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை" என்று கூறியிருந்தார்..

கருத்தியல்கள்: அதேபோல திமுக எம்பி கனிமொழியும், "மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது.. மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை.. அரசியல் கருத்தியல் என்பது வேறு" என்று விளக்கம் தந்திருந்தார்.. இதற்கு பிறகு பலமுறை மோடி தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில், அவருக்கான எதிர்ப்புகள் குறைந்தே வருகின்றன.. ஆளும் கட்சி என்பதால், பிரதமரை வரவேற்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அந்தவகையில், இன்று சென்னைக்கு வரும் பிரதமரை, திமுக அரசு வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

 Sweet incident and tamil nadu chief minister welcoms pm modi in chennai airport

சூதாட்டம்: மேலும், பிரதமர் மோடி மைசூரு செல்வதற்கு முன்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து பேச உள்ளார்.. இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், ஆன்லைன் சூதாட்டம், ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் அளிக்க உள்ளதாகவும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், ஆளுநர் விவகாரம் குறித்தும் இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இணக்கம் + நெருக்கம்: இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்என் ரவி சால்வை அணிவித்து வரவேற்றார்.. ஆளுநருக்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்.. பின்னர், முதல்வர் முக ஸ்டாலின், பிரதமருக்கு சால்வை அணிவித்து, இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.. இதையடுத்து, அமைச்சர்கள் கேஎன்நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜி.கே வாசன், சென்னை மேயர் பிரியா, உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, பிரதமரை வரவேற்றபோது, முதல்வர் ஸ்டாலின் அவரது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார்.. பதிலுக்கு பிரதமரும், இன்முகத்துடன், முதல்வரின் கையை பற்றி, முதல்வரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.. இதை அங்கிருந்த தலைவர்கள் அனைவரும் நெகிழ்ந்து கவனித்தனர்.. இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்காக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.. அப்போதும்கூட, பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின், இருவருமே ஒரே மாதிரியான பட்டு சட்டை வேட்டியில் தகதகவென மேடையில் ஜொலித்தார்கள்... 2 பேருமே அருகருகே உட்கார்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்...

 Sweet incident and tamil nadu chief minister welcoms pm modi in chennai airport

அப்போது, முதல்வர் ஏதோ சொல்ல, அதனை கேட்ட பிரதமர் செல்லமாக விரலை நீட்ட, அவரது கையை பிடித்தபடி சிரித்தார் ஸ்டாலின்.. பிறகு, சிறிது நேரம் முதல்வரின் தோளில் தட்டிகொடுத்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.. இத்தனைக்கும் அந்த நேரத்தில், "திராவிட மாடல்" குறித்த திமுகவின் பேச்சுக்கள் அதிகமாக வெளிவந்து, பாஜகவை கடுப்பாக்கி கொண்டிருந்தன.. பாஜக - திமுக இரு தரப்பிலுமே விமர்சனங்கள் மாறி மாறி வெடித்து கொண்டிருந்தன..

எனினும், திராவிட கருத்தியல் மற்றும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஆயிரம் இருந்தாலும், தலைவர்களிடையேயான இந்த இணக்கமும், நெருக்கமும், அந்த சமயத்தில் நிலவிவந்த மொத்த இறுக்கத்தையும் தளர்த்தும்விதமாகவே பார்க்கப்பட்டது.. அதுபோலவே இன்றைய தினமும், சென்னை ஏர்போர்ட்டில், இரு தலைவர்களும் கையை பற்றிக்கொண்டு, ஸ்நேகத்துடன் வரவேற்று பேசியுள்ளது, மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. எவ்வளவுதான், பொதுவாழ்க்கையில், போட்டி பொறாமைகள் இருந்தாலும், அனைத்தையும் மிஞ்சி வெளிப்பட்டு விடுகிறது "அரசியல் நாகரீகம்"..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+