ஹேப்பி மூடில் ரஜினி.. "சௌந்தர்யா"தான் காரணம்.. பறந்து வரப்போகும் செய்தி.. போயஸ் கார்டனில் என்னாச்சு?
ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க போகிறதாம்
சென்னை: ரஜினிகாந்த் வீட்டில் இருந்து சந்தோஷமான செய்தி ஒன்று வெளிவர போகிறதாம்.. இது அவரது குடும்பத்தினர், மற்றும் தொண்டர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ரஜினிகாந்த்தை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும்கூட, தனக்கென இமேஜை தமிழகத்தில் அவர் அரும்பாடு பட்டு உருவாக்கி கொண்டார்..
சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்க, எத்தனையோ அக்னி பிரவேசங்களை ரஜினி, சினிமா உலகின் "நிற அரசியலில்" நிகழ்த்தி காட்ட வேண்டி இருந்தது.

தனுஷ் + ஐஸ்வர்யா
ஆனால், இது அத்தனையையும் சுக்குநூறாக உடைத்தது ஐஸ்வர்யா - தனுஷின் காதல் கிசுகிசுக்கள்தான்.. உண்மையை சொல்லப்போனால், இவர்களின் திருமணத்தை முதன்முதலில் எதிர்த்தது ரஜினிதான் என்று அன்று பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.. சில மாதங்களுக்கு முன்பு, பயில்வான் ரங்கநாதன்கூட, ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.. அதில், "மகள் ஐஸ்வர்யாவைவிட தனுஷ் வயதில் சிறியவர் என்பதாலும், தனுஷ் -ஐஸ்வர்யா காதல் குறித்து அதிக கிசு கிசுக்கள் வெளியானதால்தான், வேறு வழியில்லாமல் ரஜினி அந்த திருமணத்துக்கு ஓகே சொன்னதாகவும், ஐஸ்வர்யாவின் பிடிவாதம்தான், ரஜினியின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் கூறியிருந்தார்.

ஹேப்பி இல்லாத ரஜினி
அதற்கேற்றபடி, தென்னக திரையுலகின் முக்கிய புள்ளியாகவும், தமிழகத்தின் மிக முக்கிய விஐபியாகவும் கருதப்படுகிற ரஜினிகாந்த் வீட்டு திருமணத்தை அவரது குடும்பத்தினர் அறிவிக்கவேயில்லை.. மாறாக வெகு சாதாரணமாக அந்த செய்தி வெளியானது பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.. இதற்கு பிறகும் தனுஷினால் ரஜினியின் மானம் கப்பலேறியதாக செய்திகள் மீண்டும் பரபரத்தன.. இறுதியில் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதி விவாகரத்து வரை சென்று, அதன்மூலம் ரஜினிக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பயங்கர பிரஷர்
எனினும், ஒரு தம்பதியின் தனிப்பட்ட விஷயம் இது என்றாலும், ரஜினி என்ற தமிழகத்தின் மிக முக்கியமான நபர் குறித்தும், அவரது ரசிகர்கள் கவலைப்பட்டார்கள்.. போதாக்குறைக்கு "மேலிட" அரசியல் அழுத்தங்கள், இன்னொருபக்கம் உடல்நல பிரச்சனை என பல இன்னல்களில் ரஜினி அவஸ்தைக்குள்ளானதையும் மறுக்க முடியாது.. இத்தனை சிக்கல்கள் வீட்டிற்குள் உள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும் இருந்தாலும், அவருக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தரக்கூடிய விஷயம், இரண்டாவது மகள் சௌந்தர்யாதான் என்கிறார்கள்.

அபெக்ஸ்
அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கு தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். மிக அழகான அந்தஸ்தான குடும்பத்தில் சம்மந்தம் வைத்துக் கொண்டதில் ரஜினிக்கு ஏக சந்தோஷம் உண்டு. மகளின் வாழ்க்கை அழகாக இருப்பதில் ரஜினிக்கு அளவுக்கடங்கா மகிழ்ச்சியும்கூட.. இதனை பலமுறை சௌந்தர்யாவிடமே சொல்லி சொல்லி ஒரு அப்பாவாக ஆனந்தவயப்படுவாராம் ரஜினி.

பூரிப்பு + குஷி
இந்த சூழலில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி ரஜினியை குதூகலப்படுத்தவிருக்கிறது. ஆம்... நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சௌந்தர்யா வருகிற 12-ந்தேதி அழகான குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறார். அதை எதிர்பார்த்து ரஜினி மற்றும் வணங்காமுடி ஆகிய இரு குடும்பத்தினரும் ஆனந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். பேர குழந்தை வரப்போகும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்... ரஜினி ஆளுநராகிறாரோ இல்லையோ, தாத்தாவாக போகிறார் என்ற குஷியில் துள்ளி குதிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்..!












Click it and Unblock the Notifications