மாணவர்களுக்கு ‘ஸ்வீட்’ நியூஸ்! ஆக.14ஆம் தேதி இனிப்பு பொங்கல்.. தமிழக அரசு உத்தரவு.. காரணம் இதுதான்!
சென்னை: வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பிறந்தநாள் அன்று மட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசும் அரசாணை வெளியிட்டது. ஆனால், ஜூன் 3ஆம் தேதி கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், அன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கும் 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளுக்கும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications