பிறப்புச் சான்றிதழ் பெயர் மாற்றத்தில் தமிழக அரசு ஸ்வீட் சர்ப்ரைஸ்.. இது சூப்பர் சான்ஸ்.. ஈஸி வழிமுறை
சென்னை: தமிழகத்தில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காமல் விடுபட்டவர்களுக்கு உதவும் வகையில், அதற்கான கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்... இந்த அவகாசத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..
பொதுவாக, ஒரு குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் எந்தவிதமான கட்டணமுமின்றி பெயரை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வருடம் கடந்த நிலையில், 15 ஆண்டுகள் வரை 200 ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி பெயரைப் பதிவு செய்ய முடியும்.

பிறப்புச் சான்றிதழ் பதிவு
ஆனால், 15 வருடங்கள் கடந்துவிட்டால் பெயர்களை சேர்க்க சட்டத்தில் இடமில்லை. இதனால் 2000-ம் ஆண்டிற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் பிறந்து 15 ஆண்டுகள் கடந்த பலரும், தங்கள் சான்றிதழில் பெயர் சேர்க்க முடியாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்..
முன்னதாக, 2000-ம் ஆண்டுக்கு முன்பாக பிறந்தவர்களுக்கும், அதன் பிறகு 15 வருடங்கள் கடந்தவர்களுக்கும் சிறப்பு சலுகையாக வழங்கப்பட்ட அவகாசம் 2024 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு - இறப்பு பதிவாளரின் பரிந்துரைகளை ஏற்று, தமிழக அரசு இப்போது இந்த அவகாசத்தை மேலும் 2 வருஷங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2026 செப்டம்பர் 26ம் தேதி வரை வழங்கப்படும் இந்த அவகாசமே பெயர் சேர்க்க வழங்கப்படும் இறுதி வாய்ப்பு என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
2000ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள்
இந்த அறிவிப்பின்படி, 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்கள் மற்றும் 2000-க்கு பிறகு பிறந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டவர்கள் என அனைவரும் எந்தவித வயது வேறுபாடுமின்றி தங்கள் பெயரை பதிவு செய்யலாம்...
அதுமட்டுமல்ல, கால அவகாசத்தில் இப்படியொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் வந்துள்ளதால், இதுவரை கோர்ட்டுக்கு சென்றோ அல்லது வட்டாட்சியர் ஒப்புதல் பெற்றோ பெயர் சேர்க்க வேண்டிய கடினமான சூழல் இனி இருக்காது.. எளிய முறையிலேயே மக்கள் தங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.
தமிழக அரசு சூப்பர் சான்ஸ்
பிறப்புச்சான்றிதழ் என்பது ஒருவரின் கல்வி, வேலைவாய்ப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு அரசு சலுகைகளை பெறுவதற்கான மிக முக்கியமான அடிப்படை ஆவணமாகும்... அதனால்தான் இதுவரை பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் இந்த சூப்பர் சான்ஸை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் சேர்க்க விரும்பும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரை அணுகலாம். இதற்கு விண்ணப்பப் படிவத்துடன் மேலும் சில ஆவணங்களும் தேவைப்படும்..
ஸ்வீட் சர்ப்ரைஸ் - பெயர் மாற்றம்
குறிப்பாக, பெற்றோரின் அடையாள ஆவணங்கள் மற்றும் குழந்தையின் பழைய பிறப்பு பதிவு ஜெராக்ஸ் போன்றவை முக்கியமானவை.... ஒருவேளை நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து, அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள இந்த அவகாசம் நீட்டிப்பானது, பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications