ஸ்டாலினின் அந்த வார்த்தை.. ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர் மனசே குளிர்ந்து போச்சு! நேரில் சந்தித்து நன்றி
சென்னை: உணவு விநியோகம் உள்ளிட்ட டெலிவரி தொழில்களை செய்து வரும் கிக் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினை சந்தித்து தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.8.2023) தலைமைச் செயலகத்தில், இணைய வழி சேவை நிறுவனங்களின் வாயிலாக உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் (Gig) தொழிலாளர்கள் சந்தித்து, சுதந்திர தின விழா உரையில், தங்களது நலனை பாதுகாக்கும் விதமாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.8.2023 அன்று சுதந்திர தின விழா உரையில், "சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.
நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நல உதவிகளை 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் வாயிலாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.
இவ்வரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 31.07.2023 வரை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 14,29,502 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 12,52,978 பயனாளிகளுக்கு 989.10 கோடி ரூபாய் நலத்திட்ட உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ, ஸெப்டோ போன்ற இணைய வழி சேவை நிறுவனங்களின் வாயிலாக உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் (Gig) தொழிலாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து, சுதந்திர தின விழா உரையில், தங்களது நலனை… pic.twitter.com/eVa26un2tU
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2023
தற்போது தொழில்முறை டாக்ஸி வாகனம் வாங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் மாற்று பாலினத்தவரான திருநங்கைகள் பயன்பெறவும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் (Gig) தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்கும் வகையில் தனியே நல வாரியம் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்காக, ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ, ஸெப்டோ போன்ற இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications