2025 ஆம் ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? ஸ்விக்கியில் 10 ஆண்டுகளாக இதுதான் கிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் எந்த உணவை மக்கள் விரும்பி அதிகளவு ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அந்த ஆண்டு எந்த உணவு அதிகம் பேரால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியல் ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

Swiggy most ordered food

How India Swiggy 'd' அறிக்கையை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ள உணவில் முதலிடம் பிரியாணிதான். இந்த பிரியாணியை 9.3 கோடி பேர் ஆர்டர் செய்துள்ளனராம்.

அதிலும் இரவை விட மதிய உணவுக்கு பிரியாணியை சாப்பிடவே மக்கள் விரும்பியுள்ளனர். இரவு நேரத்தில் வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே ஆர்டர் செய்துள்ளனர்.

பிரியாணிக்கு அடுத்து 4.42 கோடி பேர் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளனர். மேலும் 4.01 கோடி பேர் பீட்சாவை ஆர்டர் செய்துள்ளனர். அது போல் தென்னிந்திய உணவுகளில் முதலிடத்தில் வெஜ் தோசையை 2.62 கோடி பேர் ஆர்டர் செய்துள்ளனர்.

மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ்ஸாக மாலை 3 மணி முதல் 7 மணி வரை பர்கர்கள், சிக்கன் ரோல்கள், வெஜ் பீட்சாக்ககள் முன்னணி வகித்துள்ளன. அது போல் இஞ்சி டீ, சமோசாக்களில் 34.2 லட்சம் பேர் சமோசாக்களையும் 29 லட்சம் பேர் இஞ்சி டீயையும் ஆர்டர் செய்துள்ளனராம்.

ஸ்வீட் குறித்த தேடலில் ஒயிட் சாக்லேட் கேக்கை 6.9 மில்லியன் பேர் ஆர்டர் செய்துள்ளனர். அது போல் குலோப் ஜாமூன் இரண்டாவது இடத்தில் உள்ளது. காஜு பர்பி, பேசன் லட்டு ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

ஐஸ்கிரீம் வகைகளில் சாக்லேட் சுவையே மற்ற எல்லாவற்றையும் விட அதிக அளவில் விரும்பு வாங்கப்பட்டுள்ளது. மெக்சிகன் உணவு வகைகளை 1.6 கோடி பேரும் திபெத்திய உணவுகளை 12 மில்லியன் பேரும் ஆர்டர் செய்துள்ளனர்.

ஆண்டுதோறும் பிரியாணியே முதலிடத்தில் இருக்கிறது. இந்த உணவைத்தான் மக்கள் அடிக்கடி வாங்கி உண்கிறார்கள். அது சிக்கன், மட்டன், இறால், நண்டு, மீன் பிரியாணி என்றில்லை, வெஜ் பிரியாணி, பன்னீர் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை மக்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு நிமிடத்திற்கு 200 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 10ஆவது ஆண்டாக ஸ்விக்கியில் முதலிடத்தில் இருப்பது பிரியாணி என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இந்த ஆண்டு எந்த உணவுகளை அதிகம் ஆர்டர் செய்தீர்கள். அதில் மிகவும் பிடித்த உணவு எது? என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+