போலீஸாருக்கு போக்கு காட்டிய சந்தனக்கடத்தல் வீரப்பனின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சைலேந்திர பாபு!
சென்னை: போலீஸாருக்கு போக்குக் காட்டி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க சென்ற 2000-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டவர் சைலேந்திர பாபு. தன்னை பிடிக்க வந்த 4 அதிகாரிகளை கொன்ற போதிலும் தன்னை வீரப்பனால் நெருங்க முடியாதபடி அவரது கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சைலேந்திர பாபு.
Recommended Video
தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு டிஜிபியாகவும் ஹெட் ஆஃப் தி ஃபோர்ஸாகவும் நியமிக்கப்பட்டவர் சைலேந்திர பாபு. இவர் தமிழக தீயணைப்புத் துறை, கடலோர காவல் படை, ரயில்வே துறை டிஜிபியாகவும் பதவி வகித்திருந்தார்.
ரயில்வே துறை டிஜிபியாக பதவி வகித்த காலத்தில் பெண் பயணிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் குறித்து அவசர எண்ணிற்கு தகவல் அளித்தால் அடுத்த நிமிடமே அந்த நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

பாதுகாப்பு
ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வழி வகுத்து கொடுத்தவர் சைலேந்திர பாபுவின் நடவடிக்கைகள் என்றால் அது மிகையாகாது. போலீஸாருக்கு போக்குக் காட்டி வந்த சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க இவர் தீவிர முயற்சி மேற்கொண்டார். 1990 களில் ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் போக்குவரத்தை வீரப்பன் கோஷ்டியினர் தடை செய்வர்.

மரங்கள்
சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு தடங்கல் செய்வர். இதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என கூறி அரசு பேருந்தை சைலேந்திர பாபுவே ஓட்டிய சம்பவங்கள் நடந்துள்ளன. இதை பார்த்த வீரப்பன் உள்ளிட்டோர் அதிர்ந்தனர். வீரப்பனை பிடிக்க தமிழக - கர்நாடக போலீஸார் தீவிரம் காட்டினர். ஒவ்வொரு முறையும் அவரை பிடிக்க செல்லும் ஆபரேஷன்களின் போது வீரப்பன் தப்புவதும் இரு தரப்பினரும் உயிரிழப்பதும் நடைபெறும்.

சைலேந்திர பாபு
அவ்வாறு வீரப்பனை பிடிக்க கர்நாடகாவைச் தேர்ந்த எஸ்பி ஹரிகிருஷ்ணா, வனத்துறை அதிகாரி சீனிவாசன், எஸ்.ஐ.க்கள் ஷகீல், தினேஷ், சைலேந்திர பாபு ஆகிய 5 பேர் தீவிரமாக போராடினர். இவர்களில் 2 ஆண்டுகளில் சைலேந்திர பாபுவை தவிர மற்ற 4 பேரையும் வீரப்பன் சுட்டுக் கொன்றார். ஆனால் சைலேந்திர பாபுவை மட்டும் வீரப்பனால் நெருங்கவே முடியவில்லை.

சுற்றி வளைத்த பாபு
கடந்த 2000ஆம் ஆண்டு வீரப்பனை பிடிக்க மீண்டும் அனுப்பப்பட்டார். அப்போது சைலேந்திர பாபு உள்ளிட்ட குழுவினர் வீரப்பன் கோஷ்டியை சுற்றி வளைத்தனர். எனினும் இரவு நேரம் என்பதாலும் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். வீரப்பன் என்றில்லை நக்ஸலைட்டுகளையும் ஒரு கை பார்த்தவர் சைலேந்திர பாபு.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications