"காக்க காக்க படத்தில்.. என் ரோல் மாடலே இவர்தான்".. சூர்யா வியந்து பாராட்டிய சைலேந்திர பாபு!
சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்பட்ட சைலேந்திர பாபு, நடிகர் சூர்யாவின் மாடலாவார். இதை சூர்யாவே தெரிவித்திருந்தார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சைலேந்திர பாபு ஏஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, குறிப்பிட்ட ஒரு துறையின் டிஜிபியாக பதவி வகித்து வந்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் ஜே கே திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து புதிய டிஜிபியாக யாரை திமுக அரசு தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

உள்துறை அமைச்சகம்
அதன்படி 5 பேரின் பெயர்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தது. அதில் இருந்து மூவரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து ஒருவரை திமுக அரசு தேர்வு செய்தது. அந்த ஒருவர்தான் சைலேந்திர பாபு. இவர் உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்.

தனி ரசிகர் பட்டாளம்
தனது பணிக்காலத்தில் ஏழை மாணவர்களுக்கும் பெண்களுக்கும் கணினி வகுப்புகள், கராத்தே வகுப்புகளை நடத்தியவர். சென்னை, கோவை மாரத்தான்களில் ஓடியவர். தினமும் எளிய உடற்பயிற்சிகளை இளைஞர்களுக்கு சமூகவலைதளங்களில் கற்பித்து வருகிறார். இவர் போடும் வீடியோக்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பிடித்தமான ஒன்று
இது தவிர புத்தகங்களை எழுதுவதும் இவருக்குப் பிடித்தமான ஒன்றாக உள்ளது. உனக்குள் ஒரு தலைவன், சிந்தித்த வேளையில், உங்களுக்கான 24 போர் விதிகள், அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும், உடலினை உறுதி செய், சாதிக்க ஆசைப்படு உள்பட பல ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

போலீஸ் அதிகாரி
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, சைலேந்திர பாபுவை மனதில் வைத்துக் கொண்டே நடித்ததாக நடிகர் சூர்யாவே தெரிவித்திருந்தார். இப்படி பலரின் ரோல் மாடலாக திகழும் சைலேந்திர பாபுவின் பணிச் சிறக்க வாழ்த்துவோம்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications