வீரப்பனை என்கவுன்ட்டர் செய்ய பிளான்.. நான் ஹெலிகாப்டரில் மெல்ல இறங்கினேன்.. திக் திக் சைலேந்திர பாபு
சென்னை: காவல் துறையில் பல்வேறு ஆபரேஷன்களில் பணியாற்றிய போது தன்னை கொலை செய்ய நடந்த சதி திட்டங்கள் குறித்து முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சைலேந்திர பாபு. இவரது பணி ஓய்வு நாள் கடந்த ஜூன் 30 ஆகும். அன்றைய தினம் அவரையும் அவரது மனைவியையும் காரில் அமர வைத்து புதிய டிஜிபி, புதிய சென்னை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் தேர் போல் வடம் பிடித்து இழுத்தனர்.

சைலேந்திர பாபு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். ஃபிட்னஸ், மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார். ஆன்லைன் மோசடி, மேட்ரிமோனி மோசடி உள்ளிட்டவை குறித்து வீடியோ மூலம் பொதுமக்களை உஷார்படுத்தினார்.
இந்த நிலையில் இவர் தற்போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் காவல் துறையில் இருந்த போது நடந்த கொலை மிரட்டல் குறித்து அதிர்ச்சியான தகவல்களை அளித்துள்ளார். அவர் கூறுகையில் நான் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டுள்ளேன். அந்த குரூப்பில் இருந்தவர்கள் என்னை கொல்ல திட்டம் போட்டிருந்தார்கள்.
ஒரு முறை நான் கடலூர் வந்தேன். அங்கு எஸ்பியாக வந்த எனக்கு அரசு குடியிருப்பு கொடுத்தார்கள். அந்த வீடு ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்டது. கதவை திறந்தாலே தேவனாம்பட்டினம் கடல் தெரியும். நான் காலையில் வாக்கிங் செல்லும் போது மீனவர்களும் என்னுடன் வருவார்கள்.
அப்படி ஒரு நாள் நான் வாக்கிங் போய்விட்டு வந்த போது ஒரு நபர் என்னிடம் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் என்ன எழுதியிருந்தது என்பதை பிரித்து படித்தேன். அப்போது அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதில் உன் பையன் இன்று வீட்டுக்கு வரமாட்டான் என எழுதியிருந்தார்கள். என் பையன் அப்போது எல்கேஜி படித்து வந்தான். உடனே நான் போலீஸுக்கு தகவல் சொல்லி ஒரு காவலரை பள்ளிக்கு அனுப்பி அழைத்து வர சொன்னேன். ஆனால் அன்றைய தினம் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
திருச்சியில் ரவுடிகளை கைது செய்தால் அந்த ரவுடிகளின் தலைவன் போன் செய்து உன்னை வெட்டுவேன், குத்துவேன் என மிரட்டுவார்கள். ஆனால் நேரில் என்னை பார்த்தால் அவர்களுக்கு என்னை வெட்டவோ குத்தவோ தைரியமே இருக்காது. என் அம்மாவுக்கு இதெல்லாம் பயமாக இருக்கும். ஆனால் என் மனைவி பயப்படவே மாட்டாங்க.
2000ஆம் ஆண்டு நான் அடையாறு துணை கமிஷனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தார். அவர் வீரப்பனை பிடிக்க என்னை அனுப்பினார். ஒரு முறை பேங்கில் பணத்தை கொள்ளையடிக்க வருவார், அப்போது பிடித்துவிடலாம் என பிளான் செய்தோம். உடனே கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காத்துக் கொண்டிருந்தோம்.
அப்போது வீரப்பன் வந்த போது நான் இன்னும் சில காவலர்களை ஹெலிகாப்டரில் இறக்கப்பட்டோம். அப்போது எங்களுக்கும் வீரப்பன் தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் ஒரு காவலர் உயிரிழந்தார். எனினும் வீரப்பன் தப்பிவிட்டார். இது போல் பல முறை என்கவுன்ட்டருக்காக காத்திருப்போம், ஆனால் அன்று முடியாமல் போய்விடும்.
ஒரு முறை வீரப்பனை பிடிக்க முயன்ற போது ஜல்லிபாளையம் மாதையனை கைது செய்தோம். அப்போது ஊர்காரங்கள் எல்லாரும் என்னை கொல்ல வீட்டை சுற்றி வந்துவிட்டார்கள். ஒரு முறை செங்கல்பட்டு சரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது காட்டான் சுப்பிரமணியன் என்ற ரவுடியை கைது செய்தோம். அதற்கு அடுத்த நாளே வீட்டுக்கு ரவுடிகள் வந்து பால் பாக்கெட் போடும் நபரை அழைத்து அடித்து சாக்கடையில் வீசிவிட்டார்கள். வீட்டில் மனைவி மட்டும்தான் இருந்தார். நான் பரங்கிமலையில் மீட்டிங்கில் இருந்தேன். முதலில் இந்த ரவுடிகள் யாரென தெரியவில்லை, பிறகுதான் அவர்கள் சுப்பிரமணியனின் கூட்டாளிகள் என தெரியவந்தது என சைலேந்திர பாபு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications