Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல்வாதிகளை நடுங்க செய்த டிஎன் சேஷன்.. யார் இவர்? உச்சநீதிமன்றம் நினைவுகூற இதுதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் தொடர்பான ஒரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டி.என். சேஷனை நினைவுக்கூரியது அரசியல் களங்களையும் தாண்டி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

"எத்தனையோ தலைமை தேர்தல் ஆணையர்கள் வந்து சென்றுவிட்டனர். ஆனால் டி.என். சேஷனை போல நெஞ்சுரம் மிக்க ஒரு அதிகாரி இதுவரை வரவில்லையே.." என உச்ச நீதிமன்றம் கூறும் அளவுக்கு அவர் என்ன சாதித்துவிட்டார் என பலர் நினைக்கலாம்.

ஆனால், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் திருவிழா போல கொண்டாடப்படுவதற்கும், தேர்தல் நடைமுறைகளில் நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் டி.என். சேஷன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இறந்து 3 வருடங்களாகியும் கூட இன்று வரை டி.என். சேஷன் என்ற பெயர் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்துவதற்கு என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

 யாருக்கும் அடங்காத

யாருக்கும் அடங்காத "கலகக்காரர்"..

1932-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பாலக்காட்டில் பிறந்தவர்தாம் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். 1953-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற டி.என். சேஷன், மத்திய அரசின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். எந்தப் பணி தனக்கு வழங்கப்பட்டாலும், அது எத்தகைய கடினமானது என்றாலும் அதை கச்சிதமாக முடித்துக் காட்டக்கூடியவர் சேஷன். அவரது பணித்திறனையும், சுறுசுறுப்பையும் பார்த்துதான் சேஷன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதுவரை வெளி உலகுக்கும் தெரியாமல் இருந்த சேஷனின் ஆளுமை, அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு வந்த பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது. அவர் அந்தப் பதவியில் இருந்த 6 ஆண்டுக்காலமும், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

சீறிப்பாய்ந்த சீர்திருத்தங்கள்..

சீறிப்பாய்ந்த சீர்திருத்தங்கள்..

1990-ம் ஆண்டு வரை இந்தியத் தேர்தல் ஆணையம் என்பதற்கு பெரிய அளவில் மரியாதை இல்லாமல்தான் இருந்தது. அரசியல் சாசனம் சுதந்திரமாக செயல்பட அதிகாரம் வழங்கிய போதிலும், மத்திய அரசின் கைப்பாவையாகவே இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்தது. அந்த தலையெழுத்தை மாற்றி எழுதிக் காட்டினார் டி.என். சேஷன். அதுவரை இந்தியாவில் தேர்தல் என்பது விதிமுறைகள் இல்லாத திருவிழா போலவே நடந்து கொண்டிருந்தது. தேர்தல் ஒருபுறமும், பிரச்சாரம் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்கும். முதலில், சேஷன் கையை வைத்தது இந்த விதிமுறை மீதுதான். தேர்தலுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்ற விதிமுறையை அவர் கொண்டு வந்தார்.

அறிமுகமான வாக்குச்சீட்டு..

அறிமுகமான வாக்குச்சீட்டு..

வாக்காளர்களை விலைக்கு வாங்குவது, மிரட்டுவது உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். இதை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தார். தேர்தலின் போது மது விநியோகிக்கப்படுவது, அரசு வாகனங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது, ஜாதி, மத ரீதியிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது என அனைத்து அராஜகங்களுக்கும் கடிவாளம் இட்டார் சேஷன். இவ்வளவு ஏன்., கள்ள ஓட்டை தடுப்பதற்காக அவர் அறிமுகப்படுத்தியது தான் வாக்குச்சீட்டு. அதுதான் இன்று வரை நடைமுறையில் உள்ளது.அராஜகத்துக்கு பெயர்போன உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தல் முதன்முறையாக எந்தவித கலவரமும் இன்றி அமைதியாக நடந்தது சேஷனின் பதவிக்காலத்தின் போதுதான். இதுவரை சேஷனை போல நெஞ்சுரம் மிக்க தேர்தல் அதிகாரியை பார்த்திராத இந்திய அரசியல்வாதிகள் அவர் மீது பெருங்கோபத்தில் இருந்தனர்.

குவிந்த மிரட்டல்கள்.. அசராத சேஷன்..

குவிந்த மிரட்டல்கள்.. அசராத சேஷன்..

1990 முதல் 1996 வரை இந்தியத் தேர்தல் நடைமுறையையே தலைகீழாக மாற்றிக் காட்டினார் டி.என். சேஷன். அவர் எவ்வளவு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்தாரோ, அதை விட அதிகமாக அவருக்கு மிரட்டல்கள் வந்து குவிந்தன. பல அரசியல்வாதிகள் நேரடியாகவே அவருக்கு கொலை மிரட்டல்களை எல்லாம் விடுத்தனர். ஆனால், சேஷனின் இமை முடி கூட மிரட்டல்களுக்கு பயப்படாது என்பதை அவர்கள் அறியவில்லை. மிரட்டல் வர வர, இன்னும் அதிக வேகத்துடன் செயல்பட தொடங்கினார் சேஷன். அதன் பிறகுதான், சேஷனின் மன உறுதியும், அவருக்கு பயம் என்ற உணர்வே இல்லை என்பதும் அரசியல்வாதிகளுக்கு புரிந்தது. அத்தனைக்கும் அவர் எதிர்த்தது சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. அவரது பதவிக்காலத்தில் தான் சந்திரசேகர், நரசிம்மராவ், வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். ஆனால், எவருக்காகவும் சேஷன் வளைந்து கொடுக்கவில்லை. அதனால்தான், இறந்த பின்னரும் இன்று வரை அவர் நினைவுக்கூரப்படுகிறார். இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் டி.என். சேஷன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+