50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதின்னா? நாங்கள் ஏன் 100 சதவீத ஜிஎஸ்டி செலுத்தணும்.. டி ராஜேந்தர்
சென்னை: தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் நாங்கள் ஏன் முழுமையாக 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் ன தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

கொரோனா பரவலால் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடியே இருந்தன. இந்த நிலையில் கொரோனாவின் நிலைக்கேற்ப நவம்பர் 11-ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர்களில் வசூலை அள்ள முடியாவிட்டாலும் மூடப்பட்டிருந்த தியேட்டரில் 4 காசை பார்த்த ஏதோ திருப்தியிலும் கவலையிலும் தியேட்டர் அதிபர்கள் இருந்தார்கள்.

100 சதவீதம்
எனினும் அந்த 50 சதவீதத்தை 100 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை விடுத்தார்கள். ஓடிடியில் படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன. எனவே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க முதல்வர் எடப்பாடியை சந்தித்து நடிகர் விஜய் கேட்டுக் கொண்டார்.

அறிக்கை
இதையடுத்து நடிகர் சிம்புவும் தனது பங்கிற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என அறிவித்தன. ஆனால் இந்த அறிவிப்பால் கொரோனா பல மடங்கு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்களும் மத்திய அரசும் கூறியதை அடுத்து அந்த ஆணை வாபஸ் பெறப்பட்டது.

100 சதவீதம்
மீண்டும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் டி ராஜேந்தர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள், மக்கள் நலனை கட்டிக் காக்க ஒரு சின்ன வேண்டுகோள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

12 சதவீதம்
ஆனால் துரதிருஷ்டவசமாக 50 சதவீத பார்வையாளர்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. அதாவது 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. அவ்வாறெனில் நாங்கள் ஏன் முழுமையாக 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்?

வேண்டுகோள்
என்ன கொடுமை இது? தமிழகத்தில் சில இடங்களில்தான் கடற்கரை உள்ளது. இதைவிட்டால் மக்களுக்கு சினிமாக்கள்தான் பொழுதுபோக்கு. சினிமா டிக்கெட் எடுத்தால் அவங்கதான் கட்ட வேண்டி இருக்கு வரி, அவங்க தலையில ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி. இந்த மக்களுக்காகவாவது பொங்கல் போனஸாக உள்ளாட்சித் துறை வரியான 8 சதவீதத்தை நீக்க வேண்டும். எங்கள் கலை உலகின் கவலையை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications