பாஜக முக்கிய புள்ளி.. தடா பெரியசாமி.. தட்டி தூக்கிய எடப்பாடி! ஏன், என்னாச்சு? பின்னணி
சென்னை: பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமி, தற்போது அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜகவில் விருப்ப மனு அளித்த நிலையில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்து வந்த தடா பெரியசாமி, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.

இவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்தது குறித்து தடா பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியயதாவது: சிதம்பரம் தொகுதி என்னுடைய தொகுதி. அங்கு சம்பந்தமே இல்லாமல் வேலூரில் இருந்து ஒரு பெண்ணை (கார்த்திகாயினி) வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள்.
பட்டியல் அணி மாநிலத் தலைவராக உள்ள என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம். இவர்கள் 3 பேர்தான் கட்சியா? பட்டியலினத் தலைவருக்கே மரியாதை இல்லை என்றால், இவர்கள் பட்டியலின மக்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பார்கள்.
இதுகுறித்து அண்ணாமலையிடம் முறையிட்டேன். அதற்கு அவர் "கட்சி எடுத்த முடிவு" என சொல்லிவிட்டார். தற்போது அதிமுகவில் இணைந்தேன். எடப்பாடியாரின் கரங்களை வலுப்படுத்த இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன். குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளேன். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய நிச்சயம் பாடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.
அரியலூரில் பிறந்தவர் தடா பெரியசாமி. இவர் பட்டியலின மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். 1990 ஆம் ஆண்டு திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அங்கு 2001 ஆம் ஆண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
அந்த ஆண்டு நடந்த சிதம்பரம் லோக்சபா தொகுதியிலும் 2006ஆம் ஆண்டு நடந்த வரகூர் சட்டசபை தொகுதியிலும் அவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1992 ஆம் ஆண்டு திருச்சியில் லால்குடியை அடுத்த கல்லக்குடி பழங்கானத்தம்- கலக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெரியசாமி உள்ளிட்டோர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2010 இல் பஞ்சமி நில மீட்பு இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வந்தார் தடா பெரியசாமி.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications