ஸ்டாலினின் அடுத்த சிக்சர்.. 20,000 வேலை! ரூ.2,302 கோடி முதலீடு - தமிழ்நாட்டில் தைவான் காலணி கம்பெனி
சென்னை: காலணி உற்பத்தியில் உலகளவில் முன்னிலையில் இருந்து வரும் ஹை குளோரி ஃபுட்வேர் நிறுவனம் தமிழ்நாட்டில் 20 ஆயிரம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.2,302 கோடி மதிப்பில் முதலீடு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கான திட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
தைவானை சேர்ந்த பௌ சென் என்ற குழுமத்தால் தயாரிக்கப்பட்டு வரும் ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற காலணி நிறுவனம் உலகளவில் காலணி விற்பனை சந்தையில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. கோடிக்கணக்கான காலணிகளை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு பல கோடி டாலர் கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை - சிப்காட் தொழிற்பூங்காவில் காலணிகளை உற்பத்தி செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்டு இருக்கிறது. 12 ஆண்டுகளில் ரூ.2,302 கோடி முதலீடு செய்யும் இந்த நிறுவனத்தின் மூலமாக 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், "உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டின் பெள சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (M/s High Glory Footwear India Private Limited) நிறுவனம், அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2302 கோடி முதலீடு செய்துள்ளது.
20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட்-உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில், காலணிகள் உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாகவே வட தமிழ்நாட்டில் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் லெதர் உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன.

இந்திய அளவில் லெதர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பிரதான இடம்பிடிக்கும் பகுதிகளாக ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகள் இருந்து வருகின்றன. வட தமிழ்நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த லெதர் தொழிற்சாலைகள் வேலை வாய்ப்பை வழங்கி வரும் நிலையில், தைவான் நிறுவனத்தின் வருகையால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு பெருகும் என்ற நம்பிக்கை எழுந்து உள்ளது.
-
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications