Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 10,000 இழந்த டிரைவர்.. மறக்கவே முடியாத அளவுக்கு சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்தில் தாம்பரம் செல்ல அரசு பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் 10 ரூபாய் வாங்கி கொண்டு, பேருந்தில் ஏற்றி செல்ல முயன்ற தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர், போக்குவரத்து போலீசிடம் சிக்கினார்.. அவரை பிடித்தபோது, மது போதையில் அவர் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. இதனால் வெறும் 10 ரூபாய்க்கு ஆசைப்பட்ட டிரைவர் கடைசியில் 10 ஆயிரத்தை இழந்துள்ளார். என்ன நடந்தது? எப்படி சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரேயும் சரி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பும் சரி, எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த இடமே தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக மாறிவிட்டது. சரியாக கூடுவாஞ்சேரி தொடங்கி கிளாம்பாக்கம் தாண்டி வண்டலூர் உயிரியல் பூங்காவை தாண்டும் வரை நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. கிளாம்பாக்கத்தில் ஏராளமான மக்கள் அரசு பேருந்துக்காகவும், தனியார் ஆம்னி பேருந்துகளுக்காகவும் காத்துக் கொண்டிருப்பார். ஜிஎஸ்டி சாலை என்பதால், மிகப்பெரிய அளவில் வாகன போக்குவரத்து இருக்கும். எல்லா நேரமும் அதிகமான வாகனங்கள் செல்லும் சாலையாகும்.

tambaram bus Driver loses Rs 10 000 for Rs 10 in Kilambakkam An unforgettable incident

தாம்பரம் செல்ல 10 ரூபாய்

இந்நிலையில் ஜி.எஸ்.டி சாலை அருகே தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. மேலும், இந்த பேருந்து தாம்பரம் வரை செல்கிறது, பயணிகள் ஒருவருக்கு 10 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு ஏறிக் கொள்ளலாம் என அந்த பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது.

மது போதையில் இயக்கம்

அதனைக் கண்ட கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலர் ஒருவர், "இது அரசு பேருந்து வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விட்டுச் செல்லும் நிறுத்தம். எதற்காக இப்படி பேருந்து விதிமுறைகளை மீறி, பயணிகளை ஏற்றுவது ஏன்?" என அந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த ஓட்டுநர் பதிலளித்த போது, அவர் மது போதையில் இருப்பது போக்குவரத்து காவலருக்கு தெரிய வந்துள்ளது.

பதறிய ஓட்டுநர்

அதனால், கோபமடைந்த போக்குவரத்து போலீசார் பேருந்திலிருந்து கீழே இறங்கும்படி அழைத்துள்ளார். அதைக் கேட்டு பதறிய ஓட்டுநர் பேருந்தை எடுத்துக் கொண்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து காவலர் ரங்கா, அந்த தனியார் பேருந்தை விரட்டிச் சென்று மடக்க முயன்றார். அப்போது அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பயத்திலும், போதையிலும் இருந்ததால் பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மீது ஏற்றிச் சென்று தாறுமாறாக ஓட்டினார்.

வாகன ஓட்டிகள் அச்சம்

அதனைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, ஓரமாக ஒதுங்கி நின்றனர். அந்த பேருந்து பெருங்களத்தூர் இந்திரா நகர் பகுதிக்குள் சென்ற பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை லாரியின் மீது மோதி நின்றது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், பேருந்து ஓட்டுநரைப் பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


காஞ்சிபுரம் டிரைவர்

இதையடுத்து அவரிடம் உள்ள ஆவணங்களை வாங்கி விசாரணை நடத்திய போது, அந்த ஓட்டுநர் காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் ராட்டின கிணறு பகுதியைச் சேர்ந்த வேலு என்பதும், அவர் ஓட்டி வந்த பேருந்து மறைமலை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

10 ஆயிரம் அபராதம்

மேலும், அவர் மது போதையில் வாகனத்தை தாம்பரத்திற்கு ஓட்டி சென்றதும், கிளாம்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் 10 ரூபாய் வாங்கிக் கொண்டு தாம்பரத்தில் இறக்கி விட்டு செல்லலாம் என பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளை அழைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மதுபோதையில் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்த கிளாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, பேருந்தையும் பறிமுதல் செய்தார்கள். இந்த சம்பவத்தால் கிளாம்பாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+