Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரத்துக்கு குட்நியூஸ்.. பெருங்களத்தூருக்கு ஹேப்பி.. கிறுகிறு கிளாம்பாக்கம்.. திணறிய சென்னைவாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். இது சென்னைவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

Tambaram Happy news and Major announcement about Rainwater drainage works on Perungalathur, GST Road

ரயில்வே ஸ்டேஷன்: கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறியிருக்கின்றன.

இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன..

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.. முக்கியமாக, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகள் தீவிரமாகி வருகின்றன.

ஆதனூர்: அத்துடன், அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் குறித்தும் நிறைய திட்டங்கள் கையிலெடுக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் முனைப்புகள் காட்டப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்ல, விரைவில் வடகிழக்கு பருவமழை கொட்ட போகிறது.. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போது கையில் எடுத்துவிட்டது. காரணம், சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, பெருங்களத்தூர் ரோடு, ஜிஎஸ்டி ரோடு, முடிச்சூர் ரோடு என பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது.. அதனால்தான், இந்த பகுதிகளில் எல்லாம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தலைமை செயலாளர்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், தடுப்பரண் அமைத்தல், மின்சார கம்பங்கள் மற்றும் குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்தல் குறித்த ஆய்வு நடந்து முடிந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:

"நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கல்வெட்டு தூர்வாரும் பணிகள் மற்றும் அனைத்து மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும்.

தூர் வாரும் பணிகள்: சென்னை அவ்வை சண்முகம்சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை மெதுவாக மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பராக்கா சாலையில் மெதுவாக நடைபெறும் பணியை வேறு ஒரு ஒப்பந்ததாரர் முலம் விரைந்து முடிக்க வேண்டும்.

புஸ்பவதி கால்வாயின் மேல்தளத்தை உடைத்து, தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருவள்ளுவர் நகர் நீர்மட்டத்தை ஆய்வுசெய்ய வேண்டும். அனைத்து வடிகால் பணிகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். தாம்பரம் மாநகராட்சியில் ராமன் தெரு மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். வண்டல் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணிகளையும் செப். 30-க்குள் முடிக்க வேண்டும்.

ஆய்வு கூட்டம்: அதேபோல, ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் வடபழனி ஆற்காடு சாலை, வளசரவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளியம்மன் கோயில் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, பனகல் பூங்காவில் கீழ்நிலை நீர்த்தொட்டி அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். போட்கிளப் சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள பகுதியில் மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அனுமதி பெற்று, 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்று தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+