'கூண்டோடு மாத்திடுவேன்..' பெண்ணை அலைக்கழித்த போலீஸ்.. வாக்கி டாக்கியில் வந்து அலறவிட்ட ஆணையர் ரவி
சென்னை: புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தாம்பரம் காவல் ஆணையர் ரவி போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாகச் செயல்பட்டு வருகிறது. இதில், தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில் மனைவியைக் கணவன் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடவடிக்கை இல்லை
ஆனால், இது தொடர்பான புகாரை காவல்துறையினர் முறையாக வாங்கவில்லை என்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் 4 முறை புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, நடவடிக்கை எடுக்காத போலீசாரை வாக்கி டாக்கி மூலம் கடுமையாக எச்சரித்தார்.

கன்னியாகுமரிக்கு மாற்றி விடுவேன்
தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், "கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 முறை புகார் கொடுக்க அந்த பெண் வந்து செல்கிறார். பள்ளிக்கரணை போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றி விடுவேன்.

கூண்டோடு காலி பண்ணிவிடுவேன்
தனுஷ்கோடியில் போய் அலையை எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளி விடுவேன். சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கக் கூடாது. வெட்டித்தனமாக வேற வேலையை ஏதாவது பார்த்திட்டு இருந்தீங்கனா அவ்வளவு தான். கூண்டோடு காலி பண்ணிவிடுவேன். தாக்கப்பட்டது தொடர்பாகப் பெண் ஒருவர் புகார் கொடுக்க 4 முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க. போலீஸ் எதற்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள் தானே. பொதுமக்களை துன்புறுத்தத்தான் இருக்கிறீர்களா?

மக்களை அலைக்கழிக்கக் கூடாது
இதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சைபர் கிரைம் தொடர்பாகப் புகார்கள் வந்தால் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகாரைப் பெற்று சிஎஸ்ஆர் கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். சைபர் கிரைம் புகார்களைத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கக்கூடாது. புகார் கொடுக்க வருபவர்களை அலைக்கழிக்கக் கூடாது. குறையோடு புகார் கொடுக்க வருபவர்களை உட்கார வைத்து புகாரைப் பெற்று அனுப்பி விடுங்கள். சரியாக பணியைச் செய்யுங்கள்.

மோசமான விளைவுகள்
முறையாகப் பணி செய்யாவிட்டால் சும்மா விடமாட்டேன் கூண்டோடு தூக்கி விடுவேன். அதன் பிறகு மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அந்த ஆடியோவில் ஆணையர் ரவி எச்சரித்துள்ளார். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட காவலர்களும் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கி டாக்கி ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications