பொத்தேரி கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த பைக், கார்கள்.. தாம்பரம் போலீசார் செய்த பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் பிரபலமான தனியார் பல்கலைக்கழகம் இயங்குகிறது. இங்கு படிக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசின் அனுமதி இல்லாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் வாடகைக்கு விடப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். ஒட்டுமொத்தமாக காட்டாங்குளத்தூர் பகுதியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயங்கிய 109 வாகனங்களை தாம்பரம் மாநகரப் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி இயங்குகிறது. அதேபோல் கூடுவாஞ்சேரி மற்றும் மகேந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் பெத்தேரி, கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் பகுதியில் அதிக அளவில் தங்கி உள்ளனர். வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு அறை எடுத்து தங்கி படிக்கிறார்கள்.

Tambaram police seize 109 vehicles for rent in potheri college students violating regulations

இங்கு அரசு அனுமதி இல்லாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் கல்லூரி மாணவர்களுக்கு வாடகை விடுவதாக தொடர்ந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி பொத்தேரியில் உள்ள தனியார் வாகன வாடகை கடைகளில் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்,

அப்போது முறையான அங்கீகாரமின்றி பல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதும் சட்டவிரோதமாக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக வணிக தனியார் வாகனங்களை வணிக நோக்கத்துடன் உரிய அனுமதியின்றி வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி செயல்பட்ட 93 இருசக்கர வாகனங்கள் மற்றும் 16 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்களை தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுபோல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+