Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையை காட்டிய ’முருகன்’ லாக் ஆன நயினார்..நெல்லைக்கே பறக்கும் முக்கிய ஆர்டர்! யாரந்த சொந்தக்காரர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் பாஜக எம்.எல்.ஏ.வும், நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன். இந்நிலையில் அவர் கொடுத்த விளக்கத்தில் குழப்பம் இருப்பதால் 2வது சம்மனை அவரது நெல்லை வீட்டுக்கே நேரில் சென்று அளிக்கவுள்ளனர் தாம்பரம் போலீசார்..

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tambaram police will give the 2nd summon to BJP Nainar Nagendran Nellai house in person

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணம் பறிமுதல்: இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன்: அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

பறக்கும் படையினர் சோதனை: இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

நயினாருக்கு சம்மன்: இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று முன் தினமே ஆஜராக வேண்டுமென சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூலம் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தற்காலிக தீர்வு கிடைத்ததாகவும், அதற்குள் வேறு முடிவுகளை எடுக்கலாம் என நயினார் தரப்பு திட்டமிட்டிருந்தது.

மற்றொரு சிக்கல்: இந்நிலையில் அதற்கு முட்டுக் கட்டை போடும் விதமாக மற்றொரு சிக்கல் நயினார் நாகேந்திரன் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று வழக்கு தொடர்பாக ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி தாம்பரம் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். அதில் முருகன் அளித்த வாக்குமூலத்தில்,"எனக்கும் இந்த பணத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் பணம் எடுத்து வரும் நபர்களுக்கு பாதுகாப்பிற்காக தாம்பரம் ரயில்நிலையத்திற்கு இரண்டு ஆட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டார். இதனால்தான் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரை ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன்" என கூறியுள்ளார்.

பின்னணி என்ன?: இந்த நிலையில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டபோது நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல் நிலையத்தில் அவகாசம் கேட்ட வழக்கறிஞர் அளித்த விளக்கத்தில் அந்த பணத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் உறவினர் ஒருவருக்காக அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் ஆஜராவார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு விளக்கங்களுக்கும் முரண்பாடுகள் இருப்பதால் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தாம்பரம் போலீசார் இன்று நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரனின் வீட்டுக்கே நேரில் சென்று சம்மனை வழங்க உள்ளனர். அதில் ஒரு வாரத்திற்குள் நயினார் நாகேந்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+