தாம்பரத்துக்கு போயிடுங்க.. சிலம்பு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்! இதான் டைமிங்
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, சிலம்பு உட்பட 3 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 3 ரயில்களின் சேவையில் தற்காலிமாக மாற்றம் செய்யப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "சென்னையில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (புதன்கிழமை) முதல் மறு
அறிவிப்பு வரும் வரை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தாம்பரம் : அதாவது, இந்த ரெயில் (வ.எண்.20681) தாம்பரத்தில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து இயக்கப்படும் ரெயில் (வ.எண்.20682) அதிகாலை 4..25 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
அதேபோல, எழும்பூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12667) வருகிற 21-ந் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.12668) நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும்.
மறுஅறிவிப்பு: எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி தென்னக ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னை பேசின் பாலம் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (19ம் தேதி) மற்றும் 26ம் தேதிகளில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில குறிப்பிட்ட விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ஆலப்புழா: அந்த அறிவிப்பில், "நேற்று மற்றும் 25ம் தேதிகளில் இந்தூர், தன்பாத்தில் இருந்து கொச்சுவேலி, ஆலப்புழாக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல் செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாக இயங்கும். வரும் 21, 28ம் தேதிகளில் ஆலப்புழா கொச்சுவேலியில் இருந்து, தன்பாத், கோர்பா விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் செல்வதற்கு பதிலாக பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை வழியாக இயங்கும்.
பெரம்பூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இன்று (19ம் தேதி), 26ம் தேதிகளில் பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண் 22652), திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இன்று (19), 26ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக சென்னை கடற்கரை வந்து சேரும்.
காலதாமதம்: இன்று (19ம்தேதி), 26ம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் மெயில் அதிவிரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்படும். நாளை (20ம் தேதி) மற்றும் 27ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து, இயக்கப்படும் மைசூரு சதாப்தி விரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், கோவை விரைவு ரயில் காலதாமதமாக இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications