தாம்பரத்துக்கு நற்செய்தி.. பழைய ஜிஎஸ்டி ரோட்டுல "அதை" பாத்தீங்களா.. அசத்திட்டாங்களே அழகு மீனா.. சபாஷ்
சென்னை: சென்னையின் நாலாபுறமும் கடந்த 2 நாட்களாகவே பலத்த மழை கொட்டிய நிலையில், தாம்பரம் பகுதி மக்கள் மட்டும் பெருத்த நிம்மதியில் உள்ளனர்.. என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.. தென் மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழை இல்லையென்றாலும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை மழை: அதிலும் சென்னையே குளிர்ந்து போய் கிடக்கிறது. சென்னையின் புறநகரில் கடந்த 2 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்தது.. இதனால், தாம்பரம், முடிச்சூர், வண்டலூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது.
இதனால் தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து, கிழக்குப்பகுதிக்கு செல்லும் சுரங்கப்பாதை முழுவதுமே மழைநீரால் தேங்கியது.. அதுபோலவே, பழைய ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, செம்பாக்கம், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை: ஓவர்நைட்டில் பலத்த மழை பெய்துவிட்டதால், தெருக்களிலும், சாலைகளிலும் நீர் வழிந்தோடியபடியே இருந்தது.. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டனர்.
குறிப்பாக, செம்பாக்கம், திருமலைநகர், மகாகணபதி தெரு, மகா சக்தி நகர், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், அங்குள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் சுற்றிலும் தேங்கி விட்டதால், வீடுகளை விட்டு மக்களால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.. மக்களின் இந்த அவதி குறித்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனாவுக்கு தெரியவந்தது..
தாம்பரத்தில் மழை: இதையடுத்து, உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை, விரைந்து அனுப்பி உத்தரவிட்டார்.. அதன்படி, மேற்கண்ட பகுதிகள் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் மழை நீரால் பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் ஊழியர்கள், தேங்கிக்கிடந்த மழை நீரை வெளியேற்றினர்..
அதிலும், தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்குப்பகுதிக்கு செல்லும் சுரங்கப்பாதையில், ஒரு மணி நேரத்திற்குள்ளேயே மொத்த தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டு விட்டதாம். பழைய ஜிஎஸ்டி சாலை சாலையிலும் இந்த பணி தொடர்ந்தது..
மழைநீர் பாதிப்பு: அதுமட்டுமல்ல, மழைநீர் பாதிப்பு குறித்து, பொதுமக்களோ, சமூக அலுவலர்களோ, உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை நினைத்து மக்கள் கலங்கிவரும்நிலையில், தாம்பரம் மக்களுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications