தாம்பரத்துக்கு எல்லாரும் போயிடுங்க.. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே தந்த முக்கிய அறிவிப்பு.. என்னாச்சு
சென்னை: சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையே இயக்கப்படும் ஜி.டி. விரைவு ரயில் குறித்து முக்கிய தகவல் ஒன்றை, தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை ரயில்வே கோட்டத்திலிருக்கும், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதில் ஒருபகுதியாக, சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு பணிகளும், மேம்பாட்டு பணிகளும் நடைபெற உள்ளன..

தாம்பரம்: இதன்காரணமாக, வரும் 9ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் ஜி.டி., விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதுடில்லியில் இருந்து இன்று புறப்படும் ஜி.டி., விரைவு ரயில் சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு வந்து சேரும்.
மறுமர்க்கமாக வரும் 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில், எழும்பூர், ஆந்திர மாநிலம், கூடூர் வழியாக புதுடில்லிக்கு சென்றடையும்.
நேரம்: இந்த மாற்றம் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
"சென்னை ரயில்வே கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் வரும் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
மாற்றம்: அதன்படி, புதுடில்லியில் இருந்து நேற்று புறப்பட்ட ஜி.டி. விரைவு ரயில் சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும். வரும் 9-ல் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு எழும்பூர், ஆந்திர மாநிலம் கூடூர் வழியாக புதுடெல்லிக்கு செல்லும். அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மாற்றம் அமலில் இருக்கும்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9 முதல் புதுடில்லியிருந்து புறப்படும் இந்த ரயில் (எண்: 12615) தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து புதுடெல்லிக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications