ஷாமுக்கு எதுக்கு இந்த வேலை.. அதுவும் ராத்திரி நேரத்தில்.. அதிரடி கைது.. சென்னையில் பரபரப்பு..!
சூதாட்டம் ஆடியதாக நடிகர் ஷ்யாம் கைது செய்யப்பட்டார்
சென்னை: ஷாமுக்கு எதுக்கு இந்த வேலை என தெரியவில்லை... நடிகர் ஷாமிடம் எதையோ விசாரிக்க போன போலீசார், அங்கு சூதாட்டம் ஆடி கொண்டிருந்ததை அடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது லாக்டவுன் சமயங்களில் சினிமா, டிவி திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.. வடமாநிலங்களிலும் சரி, தென் மாநிலங்களிலும் சரி, சீரியல், படங்களை நம்பி பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்த எத்தனையோ பேர் வருமானம் இன்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டவர்கள் பெரும்பாலும், தினக்கூலியை நம்பி பிழைப்பு ஓட்டிவந்தவர்கள். இதனிடையே, கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடத்த அனுமதி தரப்பட்டாலும், பிரபலங்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன்
கடந்த மாதம் ஈசிஆர் ரோட்டில் ரம்யா கிருஷ்ணன் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. அந்த காரில் ரம்யா கிருஷ்ணன் இருந்தாலும், டிரைவர் கைதானார்.. ஆனால அவரும் கொஞ்ச நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அதேபோல, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி காட்டுப்பகுதிக்குள் சூரியும், விமலும் சென்று மீன் பிடித்துள்ளனர்.. இவர்கள் 2 பேருமே இ-பாஸ் வாங்கவில்லை என கூறப்படுகிறது. அது சம்பந்தமான பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகர் ஷ்யாம்
இந்த சமயத்தில்தான் நடிகர் ஷாம் சிக்கி உள்ளார்.. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் ஷாம் வசித்து வருகிறார். இங்கு நைட் நேரத்தில் நடிகர்களும், நடிகைகளும் அடிக்கடி வருகிறார்கள் என்றும், ஆட்டம் போடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.. இதனால் அக்கம்பக்கத்தினர் போலீசிலும் ஏற்கனவே இதை பற்றி தகவல் தந்துள்ளனர்.

சூதாட்டம்
மேலும் ரகசியமாக சூதாட்டம் விளையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் பறந்தது.. அந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, நடுராத்திரி அதிரடியாக அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர்.. அப்போதுதான் வீட்டுக்குள்ளேயே ஷாம் சீட்டு விளையாடி கொண்டிருந்திருக்கிறார்.. மேலும் அந்த வீட்டை சூதாட்ட கிளப்பாகவே நடத்தி வந்தது தெரியவந்தது.

13 பேர் கைது
அங்கு நிறைய சீட்டுக்கட்டுகள், பணம் இருந்துள்ளது.. அவைகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.. இந்த வீட்டின் ஓனரே ஷாம்தான்... இந்த சூதாட்டத்தில் வக்கீல்கள், இன்சூரன்ஸ் அதிகாரி, டைரக்டர்கள், பிசினஸ்மேன் என கிட்டத்தட்ட 13 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. இந்த சூதாட்ட கும்பலுக்கும் ஷாம்தான் தலைமை என்பதும் தெரியவந்துள்ளது.

பரபரப்பு
13 பேரும் சூதாட்டத்தில் கைதானாலும், ஸ்டேஷனுக்கு சென்ற நடுராத்திரியே ஜாமீன் பெற்றுவிட்டு 13 பேரும் வீட்டுக்கு சென்றுவிட்டார்களாம்! இருந்தாலும் ஷாமுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை.. பெயர் கெட்டதுதான் மிச்சம்!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications