நீட் தேர்வு விலக்கு விவகாரம்! திமுகவின் நாடகம் முடிந்து வேடம் கலைந்தது! தமிழ் மாநில காங்கிரஸ் சாடல்!
சென்னை: நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுகவின் நாடகம் முடிந்து வேடம் கலைந்தது என தமிழ் மாநில காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
டெல்லி செங்கோட்டைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு போய் அங்கே உண்ணாவிரதம் இருக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் யுவராஜ் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தி.மு.கவினர் நடத்த இருக்கும் உண்ணாவிரதம் ஒரு போலி கபடநாடகம். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை ரத்து செய்யும் முதல் கையெழுத்து என்று அறிவித்து இன்று வரை அதை மறைப்பதற்கு போடும் கபடநாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம். உண்மையில் இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்படி தேர்தலில் பொய் தகவல் கொடுப்போர் வெற்றி பெற்றாலும் பொய் என்று நிரூபணமானால் அவர்களுக்கு பதவி பறிபோகிறது.''
''அரசியலமைப்புச் சட்டமும், இந்திய நீதித்துறையும் கடந்தகாலங்களில் இதை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில் தி.மு.கவினர் பொய்யான வாக்குறுதி கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்திய அரசியல் சாசன முறைப்படி இந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று த.மா.கா இளைஞரணி வலியுறுத்துகிறது. ''
''கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடந்த தேர்தல் பரப்புரையில் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யும் முதல் கையெழுத்தை தமிழக முதல்வர் போடுவார்கள் என உறுதியும், உத்தரவாதமும் கொடுத்தவர். அந்தத் தேர்தல் சமயத்தில் தமிழக மக்கள் நீட் தேர்வில் பல உயிர்களை பறி கொடுத்திருந்த சமயம் அது. அதனால், இந்த பொய்யான வாக்குறுதியை நம்பி பெரும்பாலான வாக்காள பெருமக்கள் தி.மு.க வுக்கு வாக்களித்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்த அரசு பொய், ஊழல், பித்தலாட்டம், கபடநாடகம் என தமிழக மக்கள் முற்றிலுமாக உணர்ந்து இருக்கிறார்கள்.''
''உண்மையில் இந்த அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இந்த திமுக அரசு பதவியை ஐந்தாண்டு காலம் நிறைவு செய்ய முடியாவிட்டால், ஒருவேளை சட்ட சிக்கலில் இந்த அரசு நீக்கப்பட வேண்டி வருமானால் அதற்கு விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே பொறுப்பு. நடத்திக் காட்ட இருக்கும் உண்ணாவிரதம் உட்பட, இனி எந்த போராட்டத்தையும் திமுக அரசு கையில் எடுத்தால் அதை நம்புவதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை.''
''எனவே உண்ணாவிரதம் என்னும் கபடநாடகத்தை கைவிட்டு விடுவதே விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்துக்கு நல்லது. அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய கூட்டணிக் கட்சிகள் உட்பட 38 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் டெல்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்க விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தில் உண்டா? அறிவிக்க தயாரா? என்று த.மா.கா இளைஞரணி கேட்டுக் கொள்ள விரும்புகிறது. ''
''நீட் தேர்வை ரத்து செய்வதற்கு கையில் ரகசியம் இருப்பதாக விளையாட்டு அமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தீர்கள். தற்பொழுது மாணவ, மாணவியர்களின் உயிர்பலியை தடுப்பதற்காகவாது அந்த ரகசியத்தை கூறவேண்டுமென்று த.மா.கா இளைஞரணி கேட்டுக்கொள்கின்றது. எனவே, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! இதை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். "நாடகமும் முடிந்து! வேடமும் கலைந்தது!!" என்பதை த.மா.கா இளைஞரணி இதன் மூலம் அறிவிக்கின்றது.''
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications