டாஸ்மாக் வெண்டிங் மெஷினுக்கு எதிர்ப்பு! கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை: நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி இருக்கிறது. ஆனால் இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டும், கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ டாஸ்மாக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சென்னையில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது என டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சொல்லப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது.
மேலும் இந்த இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், இயந்திரத்தினை கடைகளின் பணி நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும், டாஸ்மாக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இவ்வியந்திரம் கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால் மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொது மக்களால் அணுக முடியாது. எனவே தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படாது என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.
ஆனால் என்னதான் டாஸ்மாக் நிறுவனம் விளக்கமளித்தாலும், இந்த இயந்திரங்கள் இளைஞர்களை மேலும் தவறான வழிக்குதான் அழைத்து செல்லும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் ஜ.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமண நிகழ்ச்சிகளிலும், விளையாட்டு அரங்கங்களிலும், மனமகிழ் மன்றங்களிலும், சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும், அரசின் அனுமதியுடன் மது விற்கலாம் என்று அரசு அறிவித்தது. பின்னர் த.மா.கா. உள்பட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அந்த திட்டத்தை அரசு கைவிட்டதாக அறிவித்தது. அதேவேளை சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது விற்பனை தொடரும் என்று அறிவித்ததை எதிர்க்கிறோம்.
இந்த நிலையில் தற்போது வெவ்வேறு ரூபத்தில் மது விற்பனையை அரசு தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு சி.எம்.பி.டி. பஸ் நிலையத்தில் தானியங்கி எந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கியுள்ளது. இச்செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. தானியங்கி எந்திரம் மூலம் மது விற்பனையை தொடங்கியுள்ள தமிழக அரசின், இந்த பிற்போக்கான திட்டத்தை எதிர்த்து த.மா.கா. இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications