மத்திய பாஜக அரசுக்கு சவால்-சிபிஐ-க்கு எதிராக முஷ்டி உயர்த்திய 10-வது மாநிலமாக தமிழ்நாடு விஸ்வரூபம்!
சென்னை: மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள சிபிஐ - மத்திய புலனாய்வுத் துறை இனி விசாரணைகள் நடத்த வேண்டும் எனில் தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. சிபிஐக்கு செக் வைத்திருக்கும் 10-வது மாநிலமாக தமிழ்நாடு இணைந்துள்ளது.
சிபிஐ எனும் மத்திய புலனாய்வுத் துறை அமைப்பானது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சுதந்திரமாக எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில்தான் இத்தகைய விசாரணைகளை அரசியல் பழிவாங்கலுக்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்பது மாநில அரசுகளின் குற்றச்சாட்டு.

இதனால் பல மாநிலங்கள் தங்களது அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என அறிவித்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. அதாவது சிபிஐ சுதந்திரமாக விசாரணை நடத்த கொடுத்திருந்த ஒப்புதலை மாநில அரசுகள் திரும்பப் பெற்றிருக்கின்றன.
ஆகிய 9 மாநிலங்கள் சிபிஐக்கு கொடுத்திருந்த் அனுமதியை திரும்பப் பெற்று இனி மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சிபிஐ விசாரிக்க முடியும் என ஆணை வெளியிட்டது.
சிபிஐக்கு ஏன் கட்டுப்பாடு?: சிபிஐ என்பது டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் 1946 பிரிவு 6-இன் கீழ் உருவாக்கப்பட்டது. அதாவது டெல்லி யூனியன் பிரதேச எல்லைக்குள் சிபிஐ சுதந்திரமாக செயல்படலாம். அதற்காக அனுமதியை இந்த சட்டப் பிரிவு வழங்குகிறது. ஆனால் இந்த எல்லைகளுக்கு அப்பால், பிற மாநிலங்களுக்குள் சிபிஐ அமைப்பு விசாரணை நடத்த அந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒப்புதல் தேவை. இத்தகைய ஒப்புதல்களை ஏற்கனவே மாநில அரசுகள் வழங்கி இருந்தன. அதனால் சிபிஐ சுதந்திரமாக எந்த மாநிலத்துக்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிபிஐ அமைப்பை அரசியல் பழிவாங்கலுக்காக எதிர்க்கட்சிகளை இலக்கு வைத்து பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து கேரளா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே சிபிஐக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றன.
தற்போது தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இந்த மாநிலங்களின் பட்டியலில் 10-வதாக இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் சிபிஐ விசாரிக்க இதுவரை தரப்பட்ட ஒப்புதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது; இனி சிபிஐ தமிழ்நாட்டில் விசாரிக்க வேண்டும் எனில் மாநில அரசின் ஒப்புதல் அவசியம் என்கிறது இந்த புதிய ஆணை.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications