அடித்து பறக்கவிட்ட அரசுப் பள்ளிகள்.. +2 ரிசல்ட்டில் மாஸ் காட்டிய மாணவர்கள்! சென்டம் அடிச்சுட்டாங்க!
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வழக்கத்தை போலவே மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் அரசு பள்ளிகளும் பொதுத்தேர்வு முடிவுகளின்படி பல சாதனைகள் படைத்துள்ளன. குறிப்பாக நூற்றுக்கு நூறு தேர்ச்சி உள்ளிட்ட மகத்தான சாதனைகளை அரசு பள்ளி மாணவ மாணவிகள் படைத்துள்ளனர்.
2024- 2025ஆம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத் தேர்வினை தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 வரை நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 3 இலட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 இலட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும் தேர்வெழுதினர்.
மேலும் 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள் என மொத்தமாக தமிழகம் முழுவதும் 8 இலட்சத்து 21 ஆயிரத்து 057 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு தேர்வு மார்ச் 25ஆம் தேதி முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற்றது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் 15ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் மதிப்பெண் சரிபார்த்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்பாகவே இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.03 சதவீதமாக உள்ளது. அதாவது 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 94.56% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கின்றனர். இந்தாண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.94% ஆக உள்ளது. அதேபோல அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சியில் ஐந்து மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. அரியலூரில் 98.32%, ஈரோட்டில் 96.88%, திருப்பூரில் 95.64%, கன்னியாகுமரியில் 95.6 %, கடலூரில் 94.99 % மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியிலும், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்திருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்தம் 7513 மேல்நிலைப் பள்ளிகளில் 2638 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 436 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றனர். அதேபோல ஏதேனும் ஒரு பாடத்தில் 100% மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2853 ஆக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications