+2 ரிசல்ட்..மாஸ் காட்டிய மாற்றுத் திறனாளிகள்! சிறைவாசிகள் சிறப்பான சம்பவம்! தனித் தேர்வர்கள் பாவம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் நடத்தப்பட்ட பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வில் மாற்றுத் திறனாளிகள், சிறைவாசிகள், தனித் தேர்வர்கள் ஆகியோரது தேர்ச்சி முடிவுகள் குறித்து பார்க்கலாம்..
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.
சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in என்ற இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்..

தமிழ்நாடு முழுவதும் 7,92,494 மாணவ மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 ஆக உள்ளது. இது 95.3 சதவீதமாகும். மொத்தம் நான்கு லட்சத்து 5,472 மாணவ மாணவிகளும். மூன்று லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் கூடுதலாக மூன்று சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் 10,49 பேர் தேர்வு எழுத வரவில்லை என கூறப்படுகிறது. மொத்தம் 7513 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 2638 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளை பொருத்தவரை 436 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.
மாணவர்கள் தவிர்த்து சிறைவாசிகள், தனி தேர்வர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வினை 8219 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதிய நிலையில் 70,46 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 93.10 சதவீதமாக உள்ளது.
இந்த ஆண்டு 140 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் 130 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த தேர்ச்சி சதவீதம் 92.86 ஆக உள்ளது. தனித்தேர்வுகளில் 16 ஆயிரத்து 904 பேர் தேர்வு எழுதிய நிலையில் 5500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சதவீதம் வெறும் 32.54 சதவீதமாக உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications