தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை! உங்க ஊர் இருக்கா? சென்னை நிலவரம் இதுதான்! மீனவர்களே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், அடுத்த 48 மணிநேரத்தில் சென்னை வானிலை எப்படி இருக்கும் என்பது பற்றியும் முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கத்தரி வெயிலின் கோர பிடியில் இருந்து மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்கள் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோக்கா புயல் வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் 9ம் தேதிக்குள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வரும் 8ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்..
இதன்காரணமாக தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகுதகிளில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 18 மாவட்டங்கள் , காரைக்கல் பகுதிகிளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தமட்டில் வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி காலநிலையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலையை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மீனவர்களை பொறுத்தமட்டில் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக 11ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், நாளைய தினம் ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications