தமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: : தமிழகத்தில் இன்று, 4985 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 70 பேர் பலியாகியுள்ளனர். எனவே, கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 2551 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்தது.

குணமடைந்தோர்
கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,861 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,21,776 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

சென்னை நிலவரம்
சென்னையில் இன்று 1,298 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 1,269 பேர் குணமடைந்தனர். மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு - 87,235 என்ற அளவில் உள்ளது. சென்னையில் குணமடைந்தவர்கள்- 70,651 பேர். சிகிச்சையில் உள்ளவர்கள் - 15,127. சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1456.

பிற மாவட்ட நிலவரம்
சென்னையில் தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதாவது சென்னையைவிட பிற மாவட்டங்களில் மூன்று மடங்கு அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

பிற மாவட்டங்கள்
சென்னைக்கு அடுத்ததாக, அதிகளவாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 454 பேர், செங்கல்பட்டில் 354 பேர், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 52,087 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 19,84,579 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications