Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 12 மாவட்டங்கள்.. வேகமெடுக்கும் கொரோனா.. இன்றைய நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,395 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,25,391
ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 45,881 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5500 என்கிற நிலையான அளவில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 45 ஆயிரம் என்கிற அளவில் முதல்முறையாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்

மொத்த எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எவ்வளவு

டிஸ்சார்ஜ் எவ்வளவு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,572 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,69,664 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1074 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 480 பேரும், சேலத்தில் 373 பேரும், தஞ்சாவூரில் 399 பேரும், திருப்பூரில் 152 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு பலி

இதுவரை எவ்வளவு பலி

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 62 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 7 பேரும், திருப்பூரில் 3 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. இன்று மட்டும் 82,725 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 77,82,736 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 80,868 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 75,55,282 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 45,881 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மாவட்ட பாதிப்பு

மாவட்ட பாதிப்பு

சென்னையில் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 1367 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,74,143 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 12560 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 468 பேரும், செங்கல்பட்டில் 343 பேரும், சேலத்தில் 337 பேரும், தஞ்சாவூரில் 251 பேரும், திருவள்ளூரில் 195 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 137 பேரும், திருப்பூரில் 132 பேரும், நாமக்கல்லில் 147 பேரும், நீலகிரியில் 169 பேரும், கடலூரில் 129 பேரும், தஞ்சாவூரில் 129 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+