தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 15 பேர் மரணம்.. 789 பேருக்கு தொற்று உறுதி
சென்னை : தமிழகத்தில் நவம்பர் 16 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 913 பேர் ஒரே நாளில் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 9,488
ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 9,349 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 800க்கும் கீழாக சரிந்து உள்ளது. கோவை சென்னையில் மட்டும் பாதிப்பு தினசரி 100 என்கிற அளவில் உள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் நவம்பர் 16 தேதியான இன்று கொரோனா தொற்றால் 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 27,16,421 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 913 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,70,761 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக நவம்பர் 16 தேதி மாலை நிலவரப்படி ஒரு நாளில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னை, திருவாரூர், திருச்சியில் தலா இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,311 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆயிரம் ஆக குறைந்து உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 9,488 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 9,349 ஆக குறைந்துள்ளது.

கோவையில் பாதிப்பு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 120 பேரும், கோவையில் 118 பேரும், செங்கல்பட்டில் 63 பேரும், ஈரோட்டில் 75 பேரும், திருப்பூரில் 47 பேரும், சேலத்தில் 38 பேரும், திருச்சியில் 36 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 1270 ஆகவும், கோவையில் 1185ஆகவும் உள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications