ஆடிப்போன சென்னை.. எத்தனையோ பேரை படிக்க வைத்த ஆம்ஸ்ட்ராங்.. ஒரு தலைவருக்கே இப்படியா? சீறும் வசீகரன்
சென்னை: ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டம் நிலைத்திருக்கும் ஒரு நாட்டில் இப்படி ஒரு கட்சியினுடைய தலைவர் வெட்டி கொல்லப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று தமிழக ஆம் ஆத்மி கொதித்து கூறியிருக்கிறது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் வயது 52 ஆகும்.
இந்த படுகொலையை கண்டித்து, தமிழக எதிர்க்கட்சிகள் அனைவருமே திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.. தற்போது இது தொடர்பான விசாரணையை போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்றாலும், சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கோரிக்கை விடுத்துள்ளது.

போராட்டம்: பகுஜன் சமாஜ் கட்சியின் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்.. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வராததால் சாலை மறியலில் ஈடுபடும் நிலைமை வந்துவிட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும்.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்" என்று பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்டனம்: ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வசீகரன் சொல்லி உள்ளதாவது:
மர்மநபர்கள்: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கொடூர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் பலரது நன்மதிப்பை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங்
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டம் நிலைத்திருக்கும் ஒரு நாட்டில் இப்படி ஒரு கட்சியினுடைய தலைவர் வெட்டி கொல்லப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது, தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இந்த படுகொலையை செய்த கொலைகாரர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
யார் குற்றவாளிகள்: யார் எந்த குற்றங்கள் செய்தாலும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் யாவரும் செயல்பட வேண்டும் தீர்ப்புகளை அவரவர்கள் தீர்மானிப்பது சரியல்ல. இதுபோல் வன்முறைகளை யாரும் கையில் எடுக்கக் கூடாது.
தமிழ்நாடு அரசும் காவல்துறையும் நீதித்துறையும் அரசியல் எதிரிகளால் அச்சுறுத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்து இருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பொது வாழ்வில் தங்களை அர்ப்பணித்து செயலாற்றுபவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
வன்முறை: அமைதியாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் வசீகரன்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications