'1.22 கோடி மெட்ரிக் டன் நெல் சாகுபடி'! – ஒரே ஆண்டில் சாதித்த தி.மு.க அரசு
சென்னை: தமிழர்களின் பிரதான உணவு அரிசி. ஆகவேதான் அண்ணா 'ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம். ஒரு படி நிச்சயம்' என்ற இலட்சிய முழக்கத்தை முன்வைத்து 1967இல் ஆட்சிக்கு வந்தார்.

அண்ணா முதல் ஸ்டாலின் வரை
தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்ததில் அரிசிக்குத் தனி இடம் உண்டு. உணவுப் பங்கீடு சரியாக முறைப்படுத்தப்படாத காலத்தில் முன்வைக்கப்பட்ட அண்ணாவின் இம்முழக்கம், கடைக்கோடியிலுள்ள மக்கள் வரை போய்ச் சேர்ந்தது. அதன் பரிசாக ஆட்சி அதிகாரம் அவரது கைக்கு வந்தது.
திமுக முன்வைத்த இந்த முழக்கம் இன்றுவரை இந்திய அரசியலில் பேசுபொருளாக இருப்பதும் அதனால்தான். அரிசி என்பது நெல் சாகுபடியைச் சார்ந்தது. நெல் என்பது வேளாண்மையைச் சார்ந்தது. வேளாண்மை என்பது நிலத்தைச் சார்ந்தது. நிலம் என்பது அன்றைக்கு நிலக்கிழார்களைச் சார்ந்தது.
அந்த அதிகாரத்தை உடைக்கும் முழக்கமாகத்தான் அண்ணா அரிசியைக் கையில் எடுத்தார். இந்தக் காலத்தில் தட்டையாக உட்கார்ந்து அரசியல் பேசுபவர்களுக்கு இந்த நுண் அரசியல் எல்லாம் புரிவதில்லை.
குறள் கூறும் நெல் அரசியல்
தமிழ்நாட்டின் 'நெற்களஞ்சியம்' எனத் தஞ்சையைச் சரித்திரகால ஆவணங்கள் கூறுகின்றன. விளைந்து சரிந்து நிற்கும் நெல்லை வள்ளுவர், 'அலகுடை' என்கிறார்.
'பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்.
அலகுடை நீழ லவர்' என்று திருக்குறள் பேசுகிறது.
சங்க இலக்கியங்களில் மட்டும் 45 இடங்களில் 'நெல்' அடையாளப்படுத்தப்படுகிறது. ஆக, 'நெல்மணிகள்'தான் தமிழ்நாட்டின் உயிர் துளிகள். அந்தச் சரித்திர கால உண்மையை தன் உழைப்பால் மீண்டும் மீட்டுத் தந்திருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் சரித்திர சாதனை
தமிழக வேளாண்மை வரலாற்றில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடியின் பரப்பை உயர்த்தியும் நெல் விளைச்சலை அதிகரித்தும் திமுக அரசு சாதித்துள்ளது. தக்க தருணத்தில் காவிரிநீரை கடைமடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்து சேர்த்ததால், கடந்த ஓராண்டில் மட்டும் 22,05,470 ஹெக்டேரில் 1,22,22,463 மெட்ரிக் டன் நெல் உற்பத்தியைப் பெருக்கிக் காட்டியுள்ளது.
இதன் அளவு என்பது 1.22 கோடி மெட்ரிக் டன். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 1.04 கோடி மெட்ரிக் டன் என்ற அளவில்தான் நெல் உற்பத்தி இருந்தது. அந்த அளவைக் காட்டிலும் இது 18 லட்சம் மெட்ரிக் டன் அதிகம்.

இந்த வளர்ச்சி குறித்து விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'அரசு எடுத்த சரியான நடவடிக்கைகள்தான் இந்தச் சாதனைக்கு வழிவகுத்துள்ளது. மேட்டூரிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிட்டதால் கடைமடைக்குக்கூட நீர் போய்ச் சேர்ந்தது. கால்வாய்கள் தூர்வாருதல் பணி முறையாகச் செய்யப்பட்டதும் பிரதான காரணம். விவசாயத்துக்கு எனத் தனி பட்ஜெட் போட்டு சாதித்துள்ளது அரசு' என விளக்கம் கொடுத்தார்.
உரத் தட்டுப்பாட்டை வென்ற தமிழ்நாடு
வேளாண்மை வரலாற்றில் நெல் சாகுபடியில் புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ள தமிழக அரசின் சாதனைக் குறித்து டெல்டா பகுதியில் இயங்கி வரும் வேளாண் களப்பணியாளர் சேதுராமனிடம் பேசினோம்.
''நெல்லைப் பொறுத்தவரை நீர் அதிகமாகத் தேவைப்படும் ஒரு பயிர். இந்த ஆண்டு பருவமழை அதிகரித்ததால் இயற்கையாகவே குறுவைச் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்தது. கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர் பரப்பளவு, இந்த ஆண்டுதான் அதிகமாகியுள்ளது. அண்மைக்கால ஆய்வு முடிவுகளால் இந்த வளர்ச்சியை நாம் எட்டியிருக்கிறோம். உதாரணமாகச் சொன்னால், குறுவை பருவத்துக்கு ஏற்ற புதிய நெல் வகைகள் வந்துள்ளன. இவை இரண்டும்தான் பிரதான காரணம்.
முன்பே இந்த நெல் வகைகள் நம்மிடம் இருந்தாலும் உரிய நேரத்தில் சாகுபடிக்குத் தேவையான காவிரிநீரை தமிழக முதலமைச்சர் முன்கூட்டியே திறந்துவிட்டார். அவரது இந்த முன்னெடுப்புதான் பரப்பளவு கூடியதற்கான முக்கிய காரணம். அதை மறுக்கவே முடியாது.
இதைவிட பெரிய சாதனை என்னவென்றால் நாடு முழுவதும் உரத் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் தமிழ்நாடு இந்தச் சாதனையைச் செய்துள்ளது" என்கிறார் சேதுராமன்.
கர்நாடகா, ஆந்திரா அரிசி வகைகள்
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாய மேம்பாடு குறித்து ஒரு தகவலை முன்வைத்துள்ளார். அதாவது, 'கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளைத் தமிழக மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதை மனதில் கொண்டு விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அது குறித்தும் சேதுராமனிடம் பேசினோம்.
"அமைச்சரின் கருத்து உண்மைதான். டெல்டா பகுதியில் நடைபெறும் சம்பா சாகுபடி அக்டோபர், நவம்பர் ஆகிய பருவகாலங்களில் நடைபெறும். இந்த பருவத்தில்தான் சம்பா பயிராக வளர்கின்ற காலம்.
இந்தக் காலங்களில் விவசாயிகள் நீண்டகால பயிர்களை விதைப்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அதாவது 160 நாள்கள் கொண்ட பயிர்கள். உதாரணமாக, சி.ஆர் 1009 நெல்லை அதிகம் விதைப்பார்கள். இது அதிக மழையைத் தாங்கி வளரக்கூடியது. ஆகவே இதை விதைக்கிறார்கள்.
இந்த அரிசி எப்படி இருக்கும் என்றால் 'இட்லி குண்டு'வைப் போல இருக்கும். இது சோற்றுக்கு உகந்ததாக இருப்பதில்லை. இது மோட்டா ரகம். இதில் சன்ன ரக உள்ள நெல்களில் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. புதிய ஆய்வுகளைச் சன்ன ரகத்தில் மேற்கொண்டு விவசாயிகளிடம் உடனடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்கிறார்.
அரசின் சாதனை என்ன?
''சரியான நேரத்தில் காவிரிநீரைத் திறந்துவிட்டது. கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடியை விரிவாக்கம் செய்தது. இந்த இரண்டும் அரசின் சாதனையாக நாம் சொல்லலாம்" என்கிறார் சேதுராமன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications