ஆக்சன் பாயும்.. தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு.. மாணவர்களுக்கு பெரிய குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வாங்க கூடாது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வந்தது. பள்ளிகளில் ஏற்கனவே அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
அதேபோல் கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த முறை 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் பலரும் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது.
முதலில் 19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 22ம் தேதியோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து tngasa.in என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்பின் கடந்த மாதம் 25ம் தேதி தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதையடுத்து கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கும்.
2ம் கட்ட கலந்தாய்வு , ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட வரை நடக்கும். ஜூன் 22-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வாங்க கூடாது என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தரவு: இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும். அரசாணையில் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. எனவே, பார்வையில் குறிப்பிடப்பட்ட அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை:இதில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர். பலருக்கும்.. முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை.
இந்த நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எங்கே சேர வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று பல படிநிலையில்களில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications