முதல்வர் பேச தொடங்கியதும்.. படபடவென வெளியேறிய ரவி! ஸ்டாலின் தந்த ரியாக்சன் இருக்கே! கவனிச்சீங்களா?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர். என் ரவி சுயமாக பேசிய உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதும் ஆளுநர் ஆர். என் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய உரையை ஆளுநர் ஆர். என் ரவி முழுமையாக வாசிக்காததற்கு எதிராகவும், ஆளுநர் ரவி சுயமாக சில விஷயங்களை பேசியதற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உடனே தீர்மானம் நிறைவேற்றினார்.
இதையடுத்து ஆளுநர் சுயமாக பேசிய உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த முழு உரை சேர்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி முதல்முறை நடக்கிறது.

நீக்கம்
பொதுவாக ஆளுநர்கள் உரை என்பது அரசு தயாரிக்கும் உரை. ஆளுநருக்கும் அரசுக்கும் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் அரசு தயாரிக்கும் இந்த உரையை ஆளுநர்கள் அப்படியே வாசிப்பதுதான் வழக்கம். இன்றும் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசித்தார். ஆனால் அந்த உரையில் வெட்டி, ஒட்டி, சில வார்த்தைகளை மாற்றி ஆளுநர் பேசி இருக்கிறார். இதுதான் அவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்ற ஆளுநர் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசு என்று கடைசி கட்டங்களில் அவர் சொல்லவில்லை. மாறாக இந்த அரசு என்று கூறியுள்ளார். இந்த பாகத்தில் இருந்த பெரியார் போன்ற தலைவர்களின் பெயர்களை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை.

ஆளுநர்
இதையடுத்தே அவரின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதும் ஆளுநர் ஆர். என் ரவி அவையில் இருந்து வெளியேறினார். முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்ததுமே ஆளுநர் ரவி சட்டென எழுந்து படபடவென வெளியே நடக்க தொடங்கினார். முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் ஆளுநர் வெளியே நடக்க தொடங்கினார். பொதுவாக அவையில் தேசிய கீதம் இசைக்கப்படும். தேசிய கீதம் போடப்பட்ட பின் சல்யூட் வைப்பார்கள். அதன்பின்தான் ஆளுநர் கிளம்பி செல்வார். அவரை சபாநாயகர் வழி அனுப்பி வைப்பார்.

முதல்வர் ஸ்டாலின்
ஆனால் இன்று இதற்கெல்லாம் ஆளுநர் காத்திருக்கவில்லை. இன்று காலை அவை தொடங்கியதும், இன்று சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு அரசு தலைமை செயலக வளாகத்தில் தமிழ்நாட்டு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர் . பின்னர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவப்பு கம்பள விரிப்புடன் சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டார்

யாரும் வழியனுப்பவில்லை
ஆனால் திரும்பி செல்லும் போது ஆளுநரை யாரும் வழியனுப்பவில்லை. அவர் பாதியில் வெளியேறியதால் வெளியே நிர்வாகிகள் யாரும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதுமே ஆளுநர் இப்படி வெளியேறிவிட்டார். பொதுவாக எதிர்க்கட்சியினர்தான் இப்படி அவையில் இருந்து வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் இன்று ஆளுநரும் எதிர்க்கட்சியை தொடர்ந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அவையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

என்ன நடந்தது?
ஆளுநர் வெளிநடப்பு செய்த போது முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தபடி நின்று கொண்டிருந்தார். அவரை தாண்டிதான் ஆளுநர் நடந்து சென்றார். அப்போது நேருக்கு நேராக ஆளுநர் ஆர். என் ரவி முகத்தை முதல்வர் பார்த்தார். ஆனால் ஆர் என் ரவி அந்த பக்கம் திரும்பி பார்க்காமல் அப்படியே வெளியே நடந்து சென்றார். அப்போது புன்முறுவலோடு அதை பார்த்த முதல்வர் ஸ்டாலின், தனது உரை அடங்கிய ஆவணங்களை இருக்கையில் வைக்க குனிந்தார்.பிறகு அமர்ந்துவிட்டார். ஆளுநர் வெளியேறுவதை அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் முதல்வர் உட்பட யாருமே போகாதீர்கள் என ஆளுநரிடம் சொல்லவில்லை. அதேபோல் ஆளுநர் சட்டென எழுந்ததும் அவர் ஏன் எழுந்து நிற்கிறார் என்று பார்க்க சபாநாயகர் அப்பாவு எழுந்து நின்றார். ஆனால் அவரும் ஆளுநரை தடுக்கவில்லை. ஆளுநர் ரவி படபடவென்று வெளியேறினார். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு தெளிவாக கேட்கும் அளவுக்கு சத்தமாக, தமிழ்நாடு வாழ்க என கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆளுநரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர் என கண்டனம் தெரிவித்தார்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications