தமிழக சட்டசபை மீண்டும் கூடியது! பேரவைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்! அமளி இல்லாத கேள்வி நேரம்!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடியது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் வரவே இல்லை.
தமிழக சட்டசபையில் கடந்த 21 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்து வருகிறது.

இதுவரை நீர் வளத் துறை, இயற்கை வளங்கள்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அந்த நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.
இதைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக் கல்வித்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.
சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசுவார்கள். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
மாலை 5 மணிக்கு நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத் துறை, தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத் தொடரிலாவது அதிமுக அமளி, வெளிநடப்பு செய்யாமல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவைக்கே அதிமுக எம்எல்ஏக்கள் வரவில்லை. இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கி அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications