அம்பென வந்து விழுந்த கேள்விகள்.. சட்டப்பேரவையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வரும் அதேசமயம், காரசாரமான விவாதங்களும் தினந்தோறும் அனலடித்து வருகின்றன. அந்தவகையில், இன்று முதல் அதாவது, மார்ச் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், சட்டப்பேரவையில் விவாதங்கள் இன்று முதல் மேலும் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் பட்ஜெட்டை கடந்த 14ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து 2025-26 ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மார்ச் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே, எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பை கடுமையான விமர்சித்து வருகின்றன.. குறிப்பாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை எல்லாம் வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்றும், தேர்தலை ஒட்டிய பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் பட்ஜெட்டை விமர்சித்திருந்தனர். இதையடுத்து, மார்ச் 17ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் நடைபெற்று வருகிறது..
அந்தவகையில், நேற்றைய தினமும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. குறிப்பாக, சென்னை தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை காரணமாக அடிக்கடி போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். மேலும், திருத்துறைப்பூண்டி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
இந்நிலையில், இன்று முதல் அதாவது, மார்ச் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட உள்ளது.. மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்தவகையில், ஏற்கனவே விவாதங்கள் அனலடித்து வரும்நிலையில், இன்றுமுதல் சட்டப்பேரவையில் அந்த விவாதங்களுக்கான பதிலுரை வரப்போவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications