சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக, அதிமுகவுக்கு செக்.. பட்டையை கிளப்பும் கூட்டணிகள்.. மெஜாரிட்டி யாருக்கு? நிலவரம் என்ன!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயிக்கிறமோ, தோற்கிறமே.. முதல்ல சண்டை செய்யணும், அதுவும் எதிரி எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், நாமலே முன்னாடி நின்று சண்டை செய்யணும், அப்பத்தான் நம்ம பலம் எதிரிக்கு மட்டுமல்ல.. நமக்கும் தெரியும்.. இதை கருத்தை அடிப்படையாக கொண்டு தான் நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்த சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன.

தமிழக மக்கள் ஒரு முறை கூட அஇஅதிமுக, திமுக தவிர வேறு எந்த அணிக்கும் பெரிய அளவில் வாக்குகளை போட்டு ஜெயிக்க வைத்தது இல்லை.

ஆனாலும் எந்த நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்தோ அல்லது தனி அணியாக களம் இறங்கி உள்ளன என்று பார்த்தால், நமக்கு எந்த அளவிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது தான் அவர்கள் இலக்கு.

வாக்கு பிரிய கூடாது

வாக்கு பிரிய கூடாது

தமிழக சட்டபை தேர்தலில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என எத்தனை அணி வந்தாலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் சிலருக்கு போகுமே தவிர வெற்றி என்பது தமிழக மக்கள் ஒரு கட்சிக்கு மட்டுமே தந்துள்ளார்கள். எப்போதுமே அப்படித்தான் தருவார்கள் என்ற நம்பிக்கை அதிமுக, திமுகுவிற்கு உள்ளது. அதனால் தான் முடிந்தவரை வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சிகளை கூட்டணி சேர்த்து அவை களம் காண்கின்றன.

வெற்றியை தடுக்க முடியும்

வெற்றியை தடுக்க முடியும்

இன்னொரு முக்கியமான விஷயம், யாராவது ஒரு கட்சியின் வெற்றியை வாய்ப்பை மூன்றாவது, நான்காவது, ஐந்தாவத அணிகளால் தடுக்க முடிந்திருக்கிறதே தவிர, ஒருமுறை கூடவேறுகட்சிகள் எதிர்க்கட்சி வரிசைக்கு கூட வந்தது இல்லை. இதற்கு முக்கியமான காரணம், அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மாற்றத்தை நாங்கள் கொண்டுவருவோம் என்று முழங்கும் கட்சிகளை மக்கள் நம்பவில்லை என்பது தான்.

2011ல் எடுத்த முடிவு

2011ல் எடுத்த முடிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே கடந்த 20 வருடங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு மாற்றாக மிகப்பெரிய வாக்குகளை வாங்கியவர் என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 தனித்து நின்று திமுகவை மெஜாரிட்டி வாங்க முடியாமல் செய்த விஜயகாந்தால், 2009ல் 10 சதவீத்ம் அளவிற்கு வாக்கு வாங்க முடிந்தது. மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுப்பார் என்று நம்பப்பட்ட விஜயகாந்த் 2011ல் ஒருவேளை தனித்து களம் கண்டிருந்தால் இந்நேரம் அவருக்கு என்று பெரிய வாக்கு வங்கியும், நல்ல வளர்ச்சியும் அடைந்திருப்பார். எனினும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்க்கட்சி தலைவர் என்கிற அளவிற்கு உயர்ந்தத விஜயகாந்த்தால், அடுத்து ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் வியூகத்தால் சரிவை சந்தித்தார். அடுத்து அவரது உடல் நிலை சரியில்லாமல் போனதால் தேமுதிகவால் பெரிய அளவில் வாக்கு வங்கியை அதன்பிறகு தக்க வைக்க முடியவில்லை.

இதுவே காரணம்

இதுவே காரணம்

இப்போது தேமுதிகவை இவ்வளவு தூரம் சொல்ல காரணம்.. 2011ல் விஜயகாந்த் தனித்தே போட்டியிட்டு இருந்தால், இப்போது உள்ள தமிழக அரசியல் நிலைமை, நிச்சயம் மாறி இருக்க வாய்ப்பு இருந்திருக்கும். எனவே தான், அதிமுக, திமுகவை தவிர பிற கட்சிகளான, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் தனி அணியாக தங்களை முன்னிலைப்படுத்தி களம் காண்கின்றன.

15 சதவீதம் வாக்குகள்

15 சதவீதம் வாக்குகள்

மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் எல்லோரும் சேர்ந்தோ அல்லது தனித்தோ வாக்கு சதவீதம் 15 சதவீதத்தை தாண்டினால், நிச்சயம் திமுக மற்றும் அதிமுக யார் வென்றாலும் மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம். ஒருவேளை எதாவது ஒருபெரிய கட்சி வரலாற்றில் இல்லாத தோல்வியை கூட சந்திக்கும் நிலை வரலாம். இப்படி சொல்ல காரணம் அதிமுக, திமுக இரண்டுமே 30 முதல் 40 சதவீதம் வாக்குகள் வாங்கக்கூடியவை. இது குறைந்தால் வெற்றி என்பது கடினமாகும். ஆனால் அதிமுக மற்றும் திமுக தவிர மற்ற கட்சிகள் யாரும் 15 சதவீதம் வாக்குகள் வாங்குவது எளிதல்ல. ஏனெனில் மக்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். இவர்களின் உழைப்பு என்ன மாதியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை மே 2 ம் தேதி பார்ப்போம்.

English summary
Tamil Nadu Assembly Election 2021 : makkal needhi maiam, Amma makkal munnetra kalagam, naam tamilar party what kind of impact will create by this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X