தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டது. அனல் கக்கும் வெயிலுக்கு நடுவே சூடுபறக்க பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி விட்டார்கள்.

4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 8 நாட்கள் மொத்தம் அவகாசம் இருந்தாலும் இடையில் 4 நாட்கல் விடுமுறை தினம் வருகின்றன.
எனவே மொத்தமே 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். மார்ச் 31 ஆம் தேதியான நாளை மகாவீர் ஜெயந்தி என்பதால் விடுமுறையாகும். ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கி முழு வருட கணக்கு முடிவு, ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழை என மொத்தம் 4 நாட்கள் விடுமுறை நாட்களிலேயே கழிந்துவிடுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு
எனவே, இன்று (திங்கள் கிழமை, வரும் ஏப்ரல் 2, 4, 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும். சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை சமர்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் வாயிலாகவும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஒருவரும், பிற வேட்பாளர்களுக்கு 10 பேரும் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும். முன்மொழியும் நபர்கள் அந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும். வேட்பாளர் எந்த தொகுதியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
5 பேர்கள் மட்டுமே அனுமதி
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உள்பட 5 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாரக்ள். தலைநகர் சென்னையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 16 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்
-
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி!












Click it and Unblock the Notifications