கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்லையொட்டி தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் திமுக தலைமையிலான கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக- பாஜக கூட்டணியும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
சரத்குமார்
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த சில கட்சிகள் இணையாதது அந்த அணிக்கு சிக்கலாக மாறியுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் தலைமையிலான அணியும், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகியிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என கூறப்படுகிறது.
சமத்துவ மக்கள் கட்சி
இந்த சூழலில் நடிகர் சரத்குமார் தொடர்பான சில தகவல்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த சரத்குமார், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுடன் பல்வேறு தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டிருந்தார். பின்னர் 2024 மார்ச் மாதம் திடீரென தனது கட்சியை பாஜகவியில் இணைத்தார். அப்போது தனது கட்சியை பாஜகவில் இணைத்தது திடீர் முடிவு என அவர் தெரிவித்திருந்தார்.
ராதிகா சரத்குமார்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் குடும்பத்தினருக்கும் முக்கிய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரது மனைவியான ராதிகா சரத்குமார் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து சரத்குமாருக்கும் கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பாஜகவில் இணைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், அவர் எதிர்பார்த்த அளவிலான பதவி அல்லது அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
பாஜக மீது அதிருப்தி
தேர்தல் நெருங்கும் சூழலில், "இந்த முறை நான் நேரடியாக போட்டியிட விருப்பம் இல்லை; என் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறேன்" என சரத்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால் சரத்குமார் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் அவர் அடுத்த கட்ட அரசியல் முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சரத்குமார் முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு தி.நகர் பகுதியில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் அமைந்துள்ள கீதம் ஹாலில் சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அவரது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், "நாட்டாமை குடும்பம்" உறுப்பினர்கள், "சுப்ரீம் ஸ்டார் பேரவை" நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சரத்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜகவில் தொடர்வாரா அல்லது வேறு அரசியல் முடிவை எடுப்பாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications