Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம்! ஓரிரு நாட்களில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத் தொடர் 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நடைபெறக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் உள்ளிட்ட இன்னும் சில முக்கிய நிகழ்வுகளை இந்தக் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம்.

 சட்டசபைக் கூட்டம்

சட்டசபைக் கூட்டம்

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி 20ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை கூடவுள்ளதால் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது அதிமுக. மேலும், அமைச்சர்களின் நடவடிக்கைகள் பற்றியும் சட்டசபையில் அதிமுக புயலை கிளப்பத் திட்டமிட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் தயார்

எல்லாவற்றுக்கும் தயார்

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் எல்லா தரவுகளையும் அமைச்சர்கள் தயார் செய்து வருகிறார்கள். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஏன் என்பதை பேரவையில் விளக்க அரசு தயாராகவே உள்ளது. இதனிடையே இந்தக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் இயற்றப்படும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட மிக அதிக வாய்ப்பிருக்கிறது.

அறிக்கைகள் தாக்கல்

அறிக்கைகள் தாக்கல்

இதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையும் சட்டசபை கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்தக் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமிருக்காது என்பது மட்டும் தெளிவாகிறது. தமிழக சட்டசபைக் கூட்டம் தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் கிடைத்த பிறகு அது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக முறைப்படி வெளியாகும்.

இருக்கை ஒதுக்கீடு

இருக்கை ஒதுக்கீடு

இதனிடையே அதிமுகவில் ஏற்பட்டுள்ள கலகத்துக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து அதிமுக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+