போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்! தலைமை செயலகத்தில் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
சென்னை: தமிழக சட்டசபையில் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என தெரிவித்தார்.
இதையடுத்து சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் வழக்கமான நிகழ்வுகள் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்றைய தினம் காலமானார். அவரது உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை போல் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications